2ம் உலகப்போரை அடுத்து கொரோனாவால் குறைந்த சராசரி மனித ஆயுட்காலம்

Added : செப் 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
லண்டன்: மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் மற்றும் பிறப்பு விகிதம் கொரோனா தாக்கத்தை அடுத்து கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு மூலமாக நிரூபித்துள்ளனர்.உலகெங்கிலும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது மற்றும் நான்காவது அலை பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளைக் காட்டிலும் தற்போது வைரஸின் வீரியம் படிப்படியாக குறைய
Covid Caused, Biggest Drop, Life Expectancy, Since, World War II, UK Study, 2ம் உலகப்போர், கொரோனா, சராசரி, மனித ஆயுட்காலம், குறைவு

லண்டன்: மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் மற்றும் பிறப்பு விகிதம் கொரோனா தாக்கத்தை அடுத்து கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு மூலமாக நிரூபித்துள்ளனர்.

உலகெங்கிலும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது மற்றும் நான்காவது அலை பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளைக் காட்டிலும் தற்போது வைரஸின் வீரியம் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இதனால் ஆசிய நாடுகள் பலவற்றில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால் வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதால் மக்கள் முகக் கவசம் அணிந்து கவனமாக இருக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.


latest tamil news


இரண்டாம் உலகப்போரில் பலர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் 29 நாடுகளில் கடந்த 2020ம் ஆண்டு பிறப்பு இறப்பு விகிதம் குறித்த ஓர் ஆய்வு மேற்கொண்டது. இதில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளன. கொரோனா தாக்கத்தை அடுத்து இந்த நாடுகளில் குழந்தைகள் பிறப்பு சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டு பிறந்த குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு முயலும் கூறப்படுகிறது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இங்கிலாந்து, வேல்ஸ், இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் சராசரி ஆயுட்காலம் கணிசமாக குறைந்துள்ளது. நடுத்தர வயது கொண்ட குடிமக்கள் அதிகமாக 2020ஆம் ஆண்டு பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 60 வயதை எட்டிய பலர் பலியாகியுள்ளனர். மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் கொரோனா தாக்கத்தினையடுத்து கணிசமாகக் குறைந்து வருவது இந்த ஆய்வு மூலமாகத் தெளிவாகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
30-செப்-202113:02:24 IST Report Abuse
mohan இந்த நூற்றாண்டு முடியும் முன் இன்னும் நிறைய சீற்றங்களை மனிதன் சந்திக்க நேரிடும்...இருநூறு வருடங்களுக்கு மேல் மனிதன் பூமியில் வாழ்வது சிரமம்....
Rate this:
Cancel
வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
27-செப்-202118:40:44 IST Report Abuse
வல்லவரையன் ////மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் கொரோனா தாக்கத்தினையடுத்து கணிசமாகக் குறைந்து வருவது இந்த ஆய்வு மூலமாகத் தெளிவாகிறது.//// “ யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி பாரத.... அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்.... பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம்... தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என கண்ணன் அவன் சொன்னபடி “கலியுகம்” முடியும் நேரம் நெருங்குது... அதுனாலதான், மதம்-சாதி-மொழி-இன பேதங்களும்... மனிதன் வெளியே மனிதகுணத்துடன் உள்ளே மிருக குணங்களுடன் அலைகிறான்... அநியாயங்களும், அக்கிரமங்களும், அறிவில்லாதவர்கள் எல்லாம் மாபெரும் அறிவாளிகளாகவும் நடிக்கத் துவங்கி... இறைவனை வணங்குவதை போலி வேடமிட்டு... இறைவன் படைத்த பூமியை சூறையாடி, அழிக்கத் தொடங்கி விட்டனர்.. அதன் விளைவும்... இறைவனின் ஆட்டமும் துவங்கி ஆச்சு... கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...? சர்வம் கிருஷ்ணார்ப்பணம்... எல்லாம் சீக்கிரம் போய்ச் சேர்ந்துடலாம்... வாருங்கோ...?
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
27-செப்-202122:55:50 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்கலியுகம் முடிய இன்னும் குறைந்த பட்சம் நாலு லட்சம் வருடங்கள் உள்ளன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X