மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் வன்முறை: தொகுதி முழுதும் 144 தடை உத்தரவு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கோல்கட்டா: ‛‛மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் இன்று (செப்.27) பா.ஜ., திரிணாமுல் தொண்டர்களிடையே மோதல் கலவரமாக வெடித்தது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மே.வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக மீண்டும் மம்தா பதவியேற்று கொண்டார். இருப்பினும்
BJP's Dilip Ghosh manhandled, Arjun Singh faces 'go back' slogans during Bhabanipur campaign; EC intervenes
இடைத்தேர்தல், பவானிபூர் தொகுதி, வன்முறை, 144 தடை, உத்தரவு

கோல்கட்டா: ‛‛மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் இன்று (செப்.27) பா.ஜ., திரிணாமுல் தொண்டர்களிடையே மோதல் கலவரமாக வெடித்தது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மே.வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக மீண்டும் மம்தா பதவியேற்று கொண்டார். இருப்பினும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இதனால், 6 மாதத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் மம்தா போட்டியிட வேண்டும் என்பதால், பவானிபூர் தொகுதி திரிணமுல் எம்.எல்.ஏ, சோபன்தேப் ராஜினாமா செய்தார். காலியான அந்த தொகுதிக்கு செப்.,30ல் இடைத்தேர்தல் நடக்கிறது.


latest tamil news



இதையடுத்து பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டி முதல்வர் மம்தா கடந்த சில நாட்களுக்கு முன் வேட்பும மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து பா.ஜ. வேட்பாளராக பிரியங்கா திப்ரிவால் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரசாரம் துவங்கிய நிலையில், இன்று (செப்.27) மாலை நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ. தேசிய துணை தலைவர் திலீப் கோஷிற்கு எதிராக திரிணமுல், காங்., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு பா.ஜ. வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பிற்கிடையே மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பா.ஜ., தேசிய துணை தலைவர் தலைவர் திலிப் கோஷ் மீது திரிணமுல் காங். தொண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

பதற்றத்தை தவிர்க்க பவானிபூர் தொகுதி முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை தருமாறு மேற்குவங்க தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
28-செப்-202100:39:16 IST Report Abuse
Milirvan போனமுறையை விட குறைவான வாக்குப்பதிவு நடந்தால் தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்..
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-செப்-202123:01:08 IST Report Abuse
வெகுளி இந்த முறை தீதீ எந்த இடத்தில் கட்டு போட்டுகொண்டு அனுதாப போஸ் கொடுப்பார்?...
Rate this:
Cancel
அழ.நாச்சியப்பன் beast Bengal. lady
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X