பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் அசம்பாவிதங்களை தவிர்க்க கிராமங்கள் செல்வோம் திட்டம் தொடக்கம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை:ஊரக உள்ளாட்சி தேர்தலில் அசம்பாவிதங்களை தவிர்க்க கிராமங்கள் செல்வோம் என்ற திட்டத்தை எஸ்.பி., தீபா சத்யன் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை என ஏழு ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் அக்., 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டமாக
 உள்ளாட்சி தேர்தலில் அசம்பாவிதங்களை தவிர்க்க கிராமங்கள் செல்வோம் திட்டம் தொடக்கம்

ராணிப்பேட்டை:ஊரக உள்ளாட்சி தேர்தலில் அசம்பாவிதங்களை தவிர்க்க கிராமங்கள் செல்வோம் என்ற திட்டத்தை எஸ்.பி., தீபா சத்யன் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை என ஏழு ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் அக்., 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் தேர்தலை நடத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், கிராமங்கள் செல்வோம் என்ற திட்டத்தை எஸ்.பி., தீபா சத்யன் இன்று தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இத்திட்டத்தின்படி அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., க்கள் தினமும் 10 கிராமங்களுக்கும், டி.எஸ்.பி., க்கள் ஐந்து கிராமங்களுக்கும், எஸ்.பி., மூன்று கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பேசி தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

அப்போது போலீஸ் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையைப் பெற வேண்டும். அதன் மூலம் குற்ற நடவடிக்கைகளை கண்காணித்து அவர்கள் குறித்து தகவல் பெற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேர்தலில் அசம்பாவிதங்கள் முன் கூட்டியே தவிர்க்கப்பட்டு அமைதியாக தேர்தல் நடக்கும்.இது குறித்து கிராமங்களுக்கு செல்லும் போலீசார் அதற்கான ஆய்வறிக்கையை எஸ்.பி., க்கு தினமும் அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X