பவானிபூர் இடைத்தேர்தல் பிரசாரம் திரிணமுல் காங்., - பா.ஜ., கைகலப்பு

Updated : செப் 29, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (12+ 9)
Share
Advertisement
கோல்கட்டா :மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கடைசி நாள் பிரசாரத்தில், பா.ஜ., - திரிணமுல் காங்., தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தோல்வி இந்த மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், நந்திகிராம்
பவானிபூர், இடைத்தேர்தல் பிரசாரம், திரிணமுல் காங்., - பா.ஜ., கைகலப்பு

கோல்கட்டா :மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கடைசி நாள் பிரசாரத்தில், பா.ஜ., - திரிணமுல் காங்., தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.


தோல்வி


இந்த மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.ஆனாலும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா, நவ., 5ம் தேதிக்குள், சட்டசபை தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டியிடுகிறார்.

இடைத்தேர்தல் 30ல் நடக்கவுள்ளது. நேற்றுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்தது. பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, பா.ஜ., தலைவர்கள் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்தனர். ஜகுபாபுர் பஜார் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த பா.ஜ., தொண்டர்கள், திரிணமுல் காங்., கட்சியினர் இடையே மோதல் வெடித்தது.அப்போது ஏற்பட்ட கைகலப்பில் பா.ஜ., தேசிய துணை தலைவர் திலிப் கோஷை சிலர் தள்ளிவிட்டனர். அவர் நிலைதடுமாறினார். பா.ஜ., - எம்.பி., அர்ஜுன் சிங்கை திரும்பி செல்லும்படி வலியுறுத்தி, திரிணமுல் காங்., தொண்டர்கள் கோஷம் எழுப்பினார். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இந்த மோதல் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆளும் திரிணமுல் காங்., கட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.இந்த மோதல் காட்சிகளை சமூகவலைதளத்தில், 'வீடியோ'வாக வெளியிட்டுள்ள பா.ஜ., தேசிய துணை தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளதாவது:திரிணமுல் காங்.,கை சேர்ந்த ரவுடிகள் என்னை கொல்ல சதி திட்டம் தீட்டி, அதை அரங்கேற்றி உள்ளனர்.


பாதுகாப்பு



முதல்வர் போட்டியிடும் தொகுதியில் மக்கள் பிரதிநிதிகளே தாக்கப்படும் போது, சாதாரண பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?இப்படிப்பட்ட வன்முறை கள் அரங்கேறும் பவானிபூரில், தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பவானிபூரில் மம்தாவின் சகோதரர்கள் போலீசாரையே தாக்கி உள்ளனர். அப்படி இருக்கையில் மக்களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும். ஓட்டுப் போட வெளியே வரக்கூடாது என, மக்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-செப்-202118:48:04 IST Report Abuse
தமிழவேல் தெளிய வச்சி தெளிய வச்சி அடிச்சி இருக்கானுவோ.. துணியெல்லாம் நனைஞ்சி இருக்கு.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-செப்-202117:09:18 IST Report Abuse
DVRR "பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த பா.ஜ., தொண்டர்கள், திரிணமுல் காங்., கட்சியினர் இடையே மோதல் வெடித்தது???"இடையே அல்ல. திரிணாமுல் காங்கிரஸ் பா ஜ க தொண்டர்கள் மீது வன்முறை நிகழ்த்தியது என்று இருக்கவேண்டும் இந்த செய்தி
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202108:54:52 IST Report Abuse
Lion Drsekar கொள்ளை அடிக்க கூட்டு சேரும் இது போன்றவர்களை மன்னிக்கவும் மக்களுக்காக தியாகம் செய்ய முன்வரும் தியாகிகளை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தவேண்டும், அப்போதுதான் நாடு என்றால் என்ன, நாட்டுப்பற்று என்றால் என்ன என்ற எண்ணமே தோன்றும், இல்லைஎன்றால் தனி ஒரு குடும்பத்துக்காக நாட்டை சீரழிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள், வந்தே மாதரம்
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-செப்-202112:05:11 IST Report Abuse
தமிழவேல் நீங்க ஒன்னு சார்.. 20 பேரை பலிகொடுத்தவனுவோ, சீனா பேரைக்கூட உச்சரிக்க கையாளாதவனுவோ சார்....
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
28-செப்-202117:11:55 IST Report Abuse
DVRRஇந்த கூட்டங்களை இந்திய சீன எல்லையில் நிறுத்தவேண்டும் - சரியான யோசனை. அதுக்கப்புறம் துண்டைக்காணோம் ஜட்டியை காணோம்னு குய்யோ முறையோ என்று இந்த கூட்டம் ஓடி வந்து விடும்....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-செப்-202118:46:31 IST Report Abuse
தமிழவேல் அதெல்லாம் உபயோகிக்கிறதில்ல தம்பி.. (சொந்த பேர்ல எழுது. இல்லேன்னா மூர்க்கன் னு சொல்லுவானுவோ.)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X