ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பிற்காக இரண்டு குழுக்கள் அமைப்பு

Updated : செப் 29, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (4+ 5)
Share
Advertisement
புதுடில்லி:ஜி.எஸ்.டி., விலக்கு பொருட்களை மறு ஆய்வு செய்யவும், வரி ஏய்ப்புகளை கண்டறியவும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி., அமைப்பின் சீரமைப்பிற்காக இரண்டு குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய அந்த குழுக்களை
ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பு, இரண்டு குழுக்கள்,  அமைப்பு

புதுடில்லி:ஜி.எஸ்.டி., விலக்கு பொருட்களை மறு ஆய்வு செய்யவும், வரி ஏய்ப்புகளை கண்டறியவும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி., அமைப்பின் சீரமைப்பிற்காக இரண்டு குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய அந்த குழுக்களை அமைத்து, மத்திய நிதித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஜி.எஸ்.டி., விகித மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட ஏழு அமைச்சகர்கள் அடங்கிய குழுவுக்கு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்க உள்ளார். மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மிஸ்ரா, கேரள நிதி அமைச்சர் பாலகோபால், பீஹார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்.உ.பி., நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா, கோவா அமைச்சர் மாவின் கோடின்ஹோ ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல், ஜி.எஸ்.டி.,யின் சீர்த்திருத்தக்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு, மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், சத்தீஸ்கர் நிதி அமைச்சர் சிங் தியோ, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா.
ஆந்திர நிதி அமைச்சர் புக்கானா ராஜேந்திரநாத், அசாம் நிதி அமைச்சர் அஜந்தா நியோக் மற்றும் ஒடிசா நிதி அமைச்சர் நிரஞ்சன் புஜாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Murali - Kumbakonam,இந்தியா
28-செப்-202111:16:16 IST Report Abuse
S.Murali நன்றாக புரிந்துகொள்ளுங்கள் அரசியல் பொய்களை உண்மை என்று நம்பும் மக்கள் இருக்கும்வரை சமூகம் முன்னேறாது டக்ளஸ் அவர்கள் என்ன ஆக்கபூர்வமான யோசனை கூறுகிறாள்கள் என்று பார்க்கவேண்டும் அவரை பற்றி அக்கா ஒஹோஒ என்று புகழ் பாடியவர்கள் ஏட்டுச் சுரய்காயை கறி சமைக்க முடியாது என்று திகைக்கிறார்கள் அரசு மருத்துவமனைகள் திரும்பவும் தரம் தாழ்கின்றன தஞ்சை மருத்துவக்கல்லூரி மோடி வாடில் உள்ள கொராநா வார்டுகள் சுத்தம் செய்யப்படுவதில்லை டா ய்லெட்கள் , வாஷ் பாசின்கள் , கடும் மோசம் எனவும் மாத்திரைகள் மருந்துகள் அனைத்தையும் வெளியே தான் வாங்கவேண்டும் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் யாரும் வருது இல்லை என்று கூடுகிறார்கள் நோயாளியின் தன்மையைப்பார்த்து அனுப்பிவிடுகிறார்கல் என்று கூறப்படுகிறது உண்மை நிலவரம் ஆயுவு மேற்கொள்ளவேண்டியது மிக அவசியம்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
28-செப்-202108:35:08 IST Report Abuse
Loganathan Kuttuva வரி ஏய்ப்பு செய்வதை முன்பு கண்டுபிடிப்பது கடினம் .அது இப்பொழுது எளிதில் கண்டுபிடித்து விடலாம் .அதிகமான நிறுவனங்கள் ஒழுங்காக வரி செலுத்துகிறார்கள் .இதனால் லஞ்சம் கொடுக்கும் பிரர்ச்சனை இல்லை .
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
28-செப்-202108:27:36 IST Report Abuse
VENKATASUBRAMANIAN நம்ம நிதி அமைச்சருக்கு ஆப்பு வைத்தாகிவிட்டது. ஆனால் இங்குள்ள கூமுட்டைகள் அது புரியாமல் உளருகின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X