ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பிற்காக இரண்டு குழுக்கள் அமைப்பு| Dinamalar

ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பிற்காக இரண்டு குழுக்கள் அமைப்பு

Updated : செப் 29, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி:ஜி.எஸ்.டி., விலக்கு பொருட்களை மறு ஆய்வு செய்யவும், வரி ஏய்ப்புகளை கண்டறியவும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி., அமைப்பின் சீரமைப்பிற்காக இரண்டு குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய அந்த குழுக்களை
ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பு, இரண்டு குழுக்கள்,  அமைப்பு

புதுடில்லி:ஜி.எஸ்.டி., விலக்கு பொருட்களை மறு ஆய்வு செய்யவும், வரி ஏய்ப்புகளை கண்டறியவும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி., அமைப்பின் சீரமைப்பிற்காக இரண்டு குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய அந்த குழுக்களை அமைத்து, மத்திய நிதித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஜி.எஸ்.டி., விகித மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட ஏழு அமைச்சகர்கள் அடங்கிய குழுவுக்கு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்க உள்ளார். மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மிஸ்ரா, கேரள நிதி அமைச்சர் பாலகோபால், பீஹார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்.உ.பி., நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா, கோவா அமைச்சர் மாவின் கோடின்ஹோ ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல், ஜி.எஸ்.டி.,யின் சீர்த்திருத்தக்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு, மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், சத்தீஸ்கர் நிதி அமைச்சர் சிங் தியோ, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா.
ஆந்திர நிதி அமைச்சர் புக்கானா ராஜேந்திரநாத், அசாம் நிதி அமைச்சர் அஜந்தா நியோக் மற்றும் ஒடிசா நிதி அமைச்சர் நிரஞ்சன் புஜாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X