ஜெர்மனி பார்லிமென்ட் தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் கட்சிக்கு பின்னடைவு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெர்லின் :ஜெர்மனியில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் 'பன்ட்ஸ்டாக்' எனப்படும் பார்லிமென்ட்டின் 20வது மக்களைவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, 299 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சமூக ஜனநாயக
 ஜெர்மனி, பார்லிமென்ட், தேர்தல்,  ஏஞ்சலா மெர்கல் கட்சி,பின்னடைவு

பெர்லின் :ஜெர்மனியில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் 'பன்ட்ஸ்டாக்' எனப்படும் பார்லிமென்ட்டின் 20வது மக்களைவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
இதையடுத்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, 299 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதில் சமூக ஜனநாயக கட்சிக்கு 25.9 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.பிரதமர் ஏஞ்செலா மெர்கலின் யூனியன் பிளாக் கட்சி 24.1 சதவீத ஓட்டுக்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 1949க்குப் பின், ஜெர்மனி பொதுத் தேர்தலில் வென்ற எந்த கட்சியும் 31 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுகளை பெற்றதில்லை.ஜெர்மனியை 16 ஆண்டுகள் ஆட்சி செய்த ஏஞ்செலா மெர்கல் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.அதனால் அவரது கட்சி, பிரதமர் வேட்பாளராக, வடக்கு ரைன் மாகாண கவர்னர் அர்மின் லஸ்செட்டை அறிவித்து இருந்தது.

இந்நிலையில் யூனியன் பிளாக் கட்சியை விட சமூக ஜனநாயக கட்சிக்கு அதிக ஒட்டுக்கள் கிடைத்துள்ளதால், கூட்டணி ஆதரவுடன், அக்கட்சியை சேர்ந்த ஓலப் ஸ்கோல்ஸ் பிரதமராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.தற்போதைய கூட்டணி அரசில் ஓலப் ஸ்கோல்ஸ், துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளை வகித்து வருகிறார்.இவர், 14.8 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள பசுமை சுற்றுச்சூழல் கட்சியுடன் இணைந்து, ஆட்சி அமைக்க முயன்று வருகிறார்.


latest tamil news



அதேநேரத்தில் அர்மின் லஸ்செட், 11.5 சதவீத ஓட்டுகளை பெற்ற சுதந்திர ஜனநாயக கட்சியுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


பெண்கள் பெரும்பான்மை

வடக்கு அட்லாண்டிக் தீவு நாடான ஐஸ்லாந்தில்பொதுத் தேர்தல் நடந்தது. பார்லி.,யின் 63 இடங்களுக்கு நடந்த தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான 37 இடங்களை, பிரதமர் கட்ரின் ஜேக்கப்ஸ்டாட்டிர் தலைமையிலான ஆளும் கூட்டணி கைப்பற்றி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.இந்த தேர்தலில் முதன் முறையாக 33 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் வாயிலாக பெரும்பான்மை பெண் உறுப்பினர்கள் உள்ள பார்லி., என்ற சிறப்பை ஐஸ்லாந்துபெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-செப்-202122:25:23 IST Report Abuse
வெகுளி தனது நாட்டின் எல்லைகளை திறந்து விட்டு ஏஞ்செலா மெர்கல் வரலாற்றுப்பிழை செய்து விட்டார் என அம்மக்கள் கருதுகிறார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X