அரசியல் செய்தி

தமிழ்நாடு

'500க்கு 200' முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Updated : செப் 29, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை :''தேர்தல் வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்டதை நிறைவேற்றி உள்ளோம்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில், தென்னிந்திய திருச்சபை 75ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நாடு முழுக்க கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் உருவாக்கி, 'அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம்' என்ற லட்சியப் பாதையில்,
 '500க்கு 200' முதல்வர்  ஸ்டாலின்  பேச்சு

சென்னை :''தேர்தல் வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்டதை நிறைவேற்றி உள்ளோம்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில், தென்னிந்திய திருச்சபை 75ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நாடு முழுக்க கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் உருவாக்கி, 'அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம்' என்ற லட்சியப் பாதையில், வெற்றி பயணம் செய்யும் திருச்சபை, தமிழகத்திற்கும், நாட்டிற்கும் கிடைத்த அரிய கருவூலம்.இன்று நடக்கும் அரசு, உங்களால் உருவாக்கப்பட்டது.

என் அரசு என்றோ, எங்களுடைய அரசு என்றோ கூற மாட்டேன். இது, நம்முடைய அரசு. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால், என்ன செய்யப் போகிறோம் என்பதை, வாக்குறுதிகளாக வழங்குவது வழக்கம்.ஆனால், தி.மு.க.,வை பொறுத்தவரையில், 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம். அதில், 200க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
28-செப்-202119:29:37 IST Report Abuse
Narayanan ஸ்டாலின் அவர்களே தேர்தல் நேரத்தில் பெட்டி வைத்து பெற்ற அனைத்து கோரிக்கைகளையும் நூறே நாட்களில் நிறைவேற்றிய உத்தமன் அல்லவா ? இது இப்படி இருக்க தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லிவிடுங்களேன் . உங்கள் அடிமை ஊடகங்கள் ஆமாம் என்று பறைசாற்றிக்கொண்டே இருக்கும் .மக்களும் உங்களை தேர்ந்தெடுத்தாக சொல்லிக்கொள்ளலாம் . . ஓ நீங்கதான் பெரியாரின் தொண்டன் ஆயிற்றே . இதெல்லாம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது அல்லவா?
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
28-செப்-202113:31:14 IST Report Abuse
seshadri அடிச்ச்சு விட வேண்டியதுதானே யார் கேள்வி கேட்க போகிறார்கள். 500ம் முடிந்து விட்டது என்று சொல்ல வேண்டியதுதானே என்ன குறைச்சல் யார் இருக்கிறார்கள் அதை சரிபார்க்க. என்ன செய்து கிழித்து விட்டார்கள் என்று இந்த அறிக்கை என்று தெரியவில்லை. பேசுவது கிறிஸ்துவ மத கூட்டத்தில்தான் அவ்வாறு தான் பேச தோன்றும்.
Rate this:
Cancel
rajaram padmanabhan - Chennai,இந்தியா
28-செப்-202113:10:13 IST Report Abuse
rajaram padmanabhan ஒரு சாலை கூட சரி செய்யப்படவில்லை, ஒரு புதிய பேருந்து கூட வாங்கப்படவில்லை, வாரம் மூன்று நாள் வந்த தண்ணீர் இப்போது இரண்டு நாட்கள் மட்டுமே, நேரம் காலம் இல்லாமல் ஒரு நாளுக்கு மூன்று முறை மின்வெட்டு. சரியான திட்டமிடல் இல்லாமல் மேட்டூர் அணைக்கட்டு திறந்து, இப்போது தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல் அவதி, இவையும் சாதனைகளில் அடங்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X