500க்கு 200 முதல்வர் ஸ்டாலின் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'500க்கு 200' முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Updated : செப் 29, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (21)
Share
சென்னை :''தேர்தல் வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்டதை நிறைவேற்றி உள்ளோம்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில், தென்னிந்திய திருச்சபை 75ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நாடு முழுக்க கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் உருவாக்கி, 'அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம்' என்ற லட்சியப் பாதையில்,
 '500க்கு 200' முதல்வர்  ஸ்டாலின்  பேச்சு

சென்னை :''தேர்தல் வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்டதை நிறைவேற்றி உள்ளோம்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில், தென்னிந்திய திருச்சபை 75ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நாடு முழுக்க கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் உருவாக்கி, 'அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம்' என்ற லட்சியப் பாதையில், வெற்றி பயணம் செய்யும் திருச்சபை, தமிழகத்திற்கும், நாட்டிற்கும் கிடைத்த அரிய கருவூலம்.இன்று நடக்கும் அரசு, உங்களால் உருவாக்கப்பட்டது.

என் அரசு என்றோ, எங்களுடைய அரசு என்றோ கூற மாட்டேன். இது, நம்முடைய அரசு. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால், என்ன செய்யப் போகிறோம் என்பதை, வாக்குறுதிகளாக வழங்குவது வழக்கம்.ஆனால், தி.மு.க.,வை பொறுத்தவரையில், 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம். அதில், 200க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X