5 ம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி 'டோஸ்' தடுப்பூசி

Updated : செப் 29, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி 'டோஸ்' மக்களுக்கு செலுத்தப்பட்டது. ஐந்தாவது முறையாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு என மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் நாடு முழுதும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.கடந்த மாதம் 27ல், முதல் முறையாக ஒரே நாளில் செலுத்தப்பட்ட
5 ம் முறை, ஒரே நாள், ஒரு கோடி  டோஸ் , தடுப்பூசி

புதுடில்லி :நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி 'டோஸ்' மக்களுக்கு செலுத்தப்பட்டது. ஐந்தாவது முறையாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு என மக்கள் உணர்ந்துள்ளனர்.

இதனால் நாடு முழுதும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.கடந்த மாதம் 27ல், முதல் முறையாக ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது. அடுத்து ஆக., 31 மற்றும் செப்., 6 ஆகிய நாட்களிலும் ஒரு கோடி டோசுக்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டன.கடந்த 17ம் தேதி ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 2.5 கோடியை கடந்து உலக சாதனை படைத்தது.

இந்நிலையில் ஐந்தாவது முறையாக நேற்றும் ஒரே நாளில் செலுத்திய தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துஉள்ளது. இதன் வாயிலாக இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 87 கோடியை எட்டியுள்ளது.மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ''மீண்டும் ஒருமுறை ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202108:23:39 IST Report Abuse
Srinivas Excellent work. Congratulations to all those involved.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-செப்-202105:11:42 IST Report Abuse
Kasimani Baskaran இவ்வளவு வேகமாக ஊசி போட்டால் நாடு என்னாவது - காங்கிரஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X