அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றும் திமுக அரசு: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கரூர் மாவட்ட தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு 8வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துக்குமாரை ஆதரித்து கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர் பொதுமக்களின் குறைகளை

கரூர் மாவட்ட தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு 8வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துக்குமாரை ஆதரித்து கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் .



latest tamil news




அதைத்தொடர்ந்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டுள்ளது திமுக தற்பொழுது ஆட்சிக்கு வந்துவிட்டனர் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தேர்தலின் போது வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை அதற்கு பொய்யான காரணங்களை கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். நீட் தேர்வு திமுக ஆட்சிக்கு வந்தவுடனே ரத்து செய்யப்படும் என்று கூறிவிட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அனுப்புகின்றனர்.

முடியாத காரியத்திற்கு பொய்யான காரணங்களை கூறி வரும் திமுகவினர் கொரோனா காலத்தில் நிவாரண உதவியாக திமுக அரசினால் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பின்னர் மின் கட்டணத்தில் 4 ஆயிரம் ரூபாயை வசூலித்து விட்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் அளித்தார். தற்போது திமுக ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படவில்லை தாலிக்கு தங்கம் பெண்களுக்கு திட்டம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.


latest tamil news



தற்பொழுது திமுக ஆட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து யாருக்கும் எந்தப் பலனும் சென்றடையாத வாரு செய்கின்ற அரசு திமுக அரசு என்று குற்றம் சாட்டினார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின் தடைக்கு காரணமாக அணில், பாம்பு கதை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202108:52:51 IST Report Abuse
Lion Drsekar இன்னாருக்கு இன்னது என்று எழுதிவிதானே தேவன் அன்று அதன் படி எல்லாமே நடக்கிறது, உலக நடப்புக்கு திரு சோவின் துக்ளக் படத்தை எல்லோரும் தினம் தினம் பார்க்கவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
28-செப்-202108:52:38 IST Report Abuse
சீனி தேர்தல் வாக்குறுதிகளுக்கு திமுக இலவச மொட்டை போட்டு, நிதியமைச்சர் மூலம் காது குத்து விழா நடத்தி வருகின்றனர். ஹஹஹஹா....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-செப்-202108:52:16 IST Report Abuse
RajanRajan திராவிடன் போலிவாக்குறுதின்னு கூவுற நீ மட்டும் என்ன உங்க ஆட்சி காலத்துலே ரொம்ப நேர்மையா வாழந்தையாக்கும். அயோக்கியனுங்களா. எல்லாவனும் அம்மாவழி அய்யாவழின்னு மக்கள் துட்டை ஆட்டைய போடுறதுக்கு தானே அரசியலுக்கு வந்தே. என்ன பெரிய அந்த காமராஜ் காக்கன்னா சொல்லிகாவா போவுற?? இருக்கிறதா வச்சு மீதி கால சங்கை ஊத்துறத வுட்டுட்டு பெருசா வந்து தூக்கி புடிக்கிறானுங்க தத்திகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X