எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ரூ.346 கோடி 'டெண்டர்' முறைகேடு: 'மாஜி' கமிஷனர்கள் சிக்குவார்களா?

Updated : செப் 28, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: கோவை மாநகராட்சியில் நடந்த 'டெண்டர்' முறைகேடு தொடர்பாக, அ.தி.மு.க., ஆட்சியில் பணிபுரிந்த முன்னாள் கமிஷனர்களிடம் விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கோவை மாநகராட்சியில், 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். தீர்மானம்நகர பொறியாளர் லட்சுமணன், உதவி நிர்வாக
ரூ.346 கோடி , டெண்டர் , முறைகேடு, மாஜிகமிஷனர்கள், விசாரணை,

கோவை: கோவை மாநகராட்சியில் நடந்த 'டெண்டர்' முறைகேடு தொடர்பாக, அ.தி.மு.க., ஆட்சியில் பணிபுரிந்த முன்னாள் கமிஷனர்களிடம் விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியில், 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தீர்மானம்


நகர பொறியாளர் லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் சரவணகுமார் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மூன்று அதிகாரிகள், மதுரை, வேலுார், ஈரோடு மாநகராட்சிகளுக்கு மாற்றப்பட்டனர்.எந்தவொரு பணியாக இருந்தாலும், டெண்டர் இறுதி செய்ய, மாமன்ற கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் வழங்கப்படும்.

அ.தி.மு.க., ஆட்சியில் கமிஷனர்களாக இருந்தவர்கள் தலைமையில் 72 கூட்டங்கள் நடத்தப்பட்டு, 2,886 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை, மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். ஒரே நிறுவனத்துக்கு, அதிகமான தொகைக்கு ஏகப்பட்ட பணிகள் ஒதுக்கியது; ஒரே பணியை தனித்தனியாக பிரித்துக் கொடுத்தது; குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே, பல டெண்டர்களில் பங்கேற்றது.சில நிறுவனங்களுக்கு முன்னரே பணி ஒதுக்கி, தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.இவற்றால், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது நிறுத்தப்பட்டது. தி.மு.க., தரப்பில் பலமுறை வலியுறுத்தியும், அப்போதைய மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மாநகராட்சி கமிஷனராக ராஜகோபால் நியமிக்கப்பட்டார்.



ஒப்படைப்பு


அவர் பொறுப்பேற்றதும், மாமன்ற தீர்மானங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. அதன்பின்னரே, டெண்டர் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.வழக்கமாக, உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால், மாநகராட்சி தனி அலுவலர் பொறுப்பு, அந்தந்த மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியில், அந்தந்த மாநகராட்சி கமிஷனர்களுக்கே பொறுப்பு வழங்கப்பட்டது.

அப்போது கமிஷனர்களாக இருந்தவர்களில், விஜயகார்த்திகேயன் 39 கூட்டங்கள் நடத்தி, 1,404 தீர்மானங்கள்; ஷ்ரவன்குமார் 22 கூட்டங்கள் நடத்தி, 922 தீர்மானங்கள்; குமாரவேல்

பாண்டியன் 11 கூட்டங்கள் நடத்தி, 560 தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கின்றனர்.

கமிஷனர்கள் ஒப்புதலின்றி டெண்டர்களை இறுதி செய்து, தீர்மானம் நிறைவேற்ற முடியாது. அதனால், டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, கமிஷனர்களாக இருந்தவர்களையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது, தமிழ்நாடு மனித உரிமை ஆணைய செயலராக விஜயகார்த்திகேயன், வேளாண்மை துறை கூடுதல் இயக்குனராக ஷ்ரவன்குமார், வேலுார் கலெக்டராக குமாரவேல் பாண்டியன் பணிபுரிகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
28-செப்-202111:50:20 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இதைப்பத்தி எங்களுக்கு கவலை கிடையாது பிரதமர் மோடியோட சொத்து மதிப்பு எப்படி கூடுன்னச்சி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X