அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., - தி.மு.க., இணக்கம்: மாற்றம் ஏற்படுத்திய பியுஷ் கோயல்

Updated : செப் 28, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
தமிழகத்தில் சட்டசபை தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பின் ஆட்சியை அமைத்த போதும், பா.ஜ.,வுக்கு எதிராக தி.மு.க., தொடர்ந்து கடுமையாக மோதியது. ஆனால் ஆட்சி அமைந்து 100 நாட்களைக் கடந்த பின், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே புதிய இணக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த மாற்றத்துக்கான சூத்திரதாரியாக, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் செயல்பட்டுள்ளார். 58க்கு தீர்வுதமிழகத்தில்
பா.ஜ., தி.மு.க., இணக்கம், மாற்றம், பியுஷ் கோயல்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பின் ஆட்சியை அமைத்த போதும், பா.ஜ.,வுக்கு எதிராக தி.மு.க., தொடர்ந்து கடுமையாக மோதியது. ஆனால் ஆட்சி அமைந்து 100 நாட்களைக் கடந்த பின், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே புதிய இணக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த மாற்றத்துக்கான சூத்திரதாரியாக, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் செயல்பட்டுள்ளார்.


58க்கு தீர்வுதமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு அமைந்த பின் மத்திய அரசுக்கு எதிரான போக்கு தென்பட்டது. தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், பா.ஜ.,வுக்கு எதிராகவும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் டில்லி பயணத்துக்குப் பின் தமிழகத்தின் நிலைப்பாட்டில் புதிய மாற்றம் தென்படத் துவங்கியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஸ்டாலின் கொடுத்தார்.

அதை ஆர்வமுடன் படித்து பார்த்த மோடி, தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும், இணைந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார். அதன் பின் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு 85 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 58க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


ஈடுபாடு உண்டுஅதிகாரிகள் நிலையில் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர் டாக்டர் பி.கே. மிஸ்ராவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அமுதா, பிரதமர் அலுவலக கூடுதல் செயலராக உள்ளார். தமிழகத்தின் தேவைகளை அவர் கவனித்து வருகிறார்.இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை உருவாக முக்கிய சூத்திரதாரியாக பியுஷ் கோயல் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கும், தி.மு.க., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான டி.ஆர். பாலுவுக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. தமிழக அரசின் தேவைகள் குறித்து பாலு கூறுவதை உடனடியாக ஏற்று, அதை நிறைவேற்றி தருகிறார் கோயல்.தற்போது தி.மு.க.,வுக்கு ராஜ்யசபாவில் 10 எம்.பி.,க்கள் உள்ளனர். முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதவும் மத்திய அரசுக்கு தேவை. ராஜ்யசபாவின் முன்னவராகவும் பியுஷ் கோயல் உள்ளார். அதனால் அனைத்து எதிர்க்கட்சிகளிலும் நண்பர்களை அவர் உருவாக்கியுள்ளார்.

சாதுர்யமான அரசியல்வாதியான அவர், 2019 லோக்சபா தேர்தலின்போது தமிழக விவகாரத்தை கவனித்து கொண்டார். தமிழக அரசியலில் அவருக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு.ஸ்டாலின் சந்திப்பின்போது மத்திய - மாநில அரசுகள் இடையே இணக்கமாக உறவு இருக்க வேண்டும் என மோடி கூறியுள்ளார். அதன்பின் தமிழக அமைச்சர்கள் பலரும் டில்லி வந்து மத்திய அரசின் மூத்த அமைச்சர்களை சந்தித்து, மாநிலத்தின் தேவைகள் குறித்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் என தமிழகத்தின் தேவை குறித்து பாலு குறிப்பிடும் அனைத்தையும், பியுஷ் கோயல் நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசின் பிரதிநிதியாக பாலுவும், மத்திய அரசின் பிரதிநிதியாக பியுஷ் கோயலும் இணைந்து, ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். மத்திய அரசு குறித்தும், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்தும், தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.


ஆரோக்கியமான சூழல்ஜி.எஸ்.டி., தொடர்பான சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான அமைச்சர்கள் குழுவில் அவரது பெயரை சேர்க்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இதனால், ஜி.எஸ்.டி., அமலால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்ல இணக்கமான உறவு, ஆரோக்கியமான சூழலை உருவாக்கிஉள்ளது. இதனால் தமிழகத்துக்கு அதிக திட்டங்கள் உள்ளிட்டவற்றை கேட்டு பெறும் வாய்ப்பும் கிடைத்து உள்ளது.


கூட்டாட்சியை நம்புகிறோம்!latest tamil news
மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் கூட்டாட்சி தத்துவத்தை நம்புகிறது. இணைந்து கூட்டாக செயல்படுவோம் என்பதே, மோடியின் கொள்கை. அதுவே தமிழகத்தின் கொள்கையாகவும் இருப்பது வரவேற்கக் கூடியது. தமிழக அரசுடன் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால், முதல்வர் ஸ்டாலின் அல்லது டி.ஆர். பாலுவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

- புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
04-அக்-202116:14:47 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy அவர்கள் டிவி யில் தொடர்ந்து மோடியையும் இந்துவையும் தாக்குகிறார்கள். அதை மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மாநில முதல்வர் இருவருக்கும் பா ஜ க தமிழ்நாடு ஏன் நினைவு படுத்துவது இல்லை.
Rate this:
Cancel
Tamilarasan Tamilan - Alain,ஐக்கிய அரபு நாடுகள்
04-அக்-202112:49:11 IST Report Abuse
Tamilarasan Tamilan இது எதிர்பார்க்கப்பட்டது தான் ஆரம்பத்தில் எதிரும் புதிருமாக இருப்பதைப் போன்று தோற்றம் ஏற்படுத்தப்பட்டது தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக விலகிவருகிறது தற்போது புதிய கல்விக்கொள்கையில் திமுக அரசு மத்திய அரசை ஏற்றுக்கொண்டுவிட்டதுபோல் தெரிகிறது, நீட் தேர்விலும் வளைந்து கொடுத்தாகிவிட்டது, இப்படி படிப்படியாக வாக்களித்த தமிழக மக்களை முட்டாளாக்கும் செயல்களை திமுக அரசு மேற்கொள்ளும் போல் தெரிகிறது பொறுத்திருந்து பார்ப்போம்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04-அக்-202106:59:18 IST Report Abuse
NicoleThomson இவங்க அப்பா காலத்தில் இருந்து திமுகவை பார்த்து வந்துள்ளோம் , என்ன மழை விட்டாலும் தூவானம் போன்ற வசனங்கள் இப்போது இல்லை ஆனால் முதுகில் குத்துவது என்னவோ தொடர்கிறது இல்லையா திமுக அன்பர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X