பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலர் பாராட்டு

Updated : செப் 29, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: கொரோனா தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்தி, அதிக நபர்களுக்கு தடுப்பூசி போட்ட கலெக்டர்களுக்கு பாராட்டு தெரிவித்து, தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுதும் 26ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டதற்கு பாராட்டுகள். ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசிகள் போடப்பட்ட சதவீத அடிப்படையில்,
மாவட்ட கலெக்டர்களுக்கு  தலைமை செயலர் பாராட்டு

சென்னை: கொரோனா தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்தி, அதிக நபர்களுக்கு தடுப்பூசி போட்ட கலெக்டர்களுக்கு பாராட்டு தெரிவித்து, தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதி
உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுதும் 26ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டதற்கு பாராட்டுகள். ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசிகள் போடப்பட்ட சதவீத அடிப்படையில், மாவட்டங்களை வரிசைப்படுத்தி என் கருத்துக்களை பதிவிட்டுள்ளேன்.மிக சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அலுவலர்களுக்கு என் பாராட்டுகள். பின்தங்கிய மாவட்டங்களில், அந்த மாவட்ட கலெக்டர்கள் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.
நாம் கடுமையான முயற்சிகள் எடுத்தாலும், முக்கிய மாநிலங்களில் தடுப்பூசி போடுவதில் 13வது இடத்தில் தொடர்கிறோம். இதற்கு தடுப்பூசி தட்டுப்பாடும் ஒரு காரணம். இதை சரி செய்ய முயற்சிகள் எடுத்துள்ளோம். தடுப்பூசி போடுவதில் பின்தங்கிய மாவட்டங்களில், கலெக்டர்கள் தினசரி தடுப்பூசி போடும் பணியை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும். கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அனைவரும் இணைந்து, கொரோனா தடுப்பூசி போட்ட மாநிலங்களில், தமிழகத்தை முன்னிலைக்கு கொண்டு வருவோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


மாவட்டங்கள் நிலை

ஒட்டுமொத்தமாக, நேற்று முன்தினம் வரை தடுப்பூசி போடப்பட்ட மாவட்டங்களில், கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டங்களுக்கு, 'எக்சலென்ட்' என தலைமை செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.திருவள்ளூர், விருதுநகர், ஈரோடு, செங்கல்பட்டு, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு, 'வெரிகுட்' என்றும், அரியலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, துாத்துக்குடி, கடலுார், திருநெல்வேலி, விழுப்புரம் செயல்பாடுகள், 'மோசம்' என்றும் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருவாரூர், மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகப்பட்டினம், வேலுார், ராமநாதபுரம் மாவட்டங்களில், 'முன்னேற்றம் தேவை' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202110:42:30 IST Report Abuse
duruvasar முதல்வருக்கும், முதன்மை செயலாளருக்கும் கடிதம் எழுதும் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்பது சொல்வது கடினம். சபாஷ் சரியான போட்டி.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-செப்-202109:19:07 IST Report Abuse
RajanRajan நீங்க கொடுக்கிற இருட்டுக்கடை அல்வா இருக்கே ரொம்ப டெஸ்டு தான் போங்க.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202108:59:30 IST Report Abuse
Lion Drsekar சென்னை போன்ற நரகங்களுக்கு கலக்ட்டர் யார் என்றே தெரியாது மாநரகஆட்சியினர்கள் துணையுடன் மற்றும் சமூக சேவக அமைப்புகள் முன்னின்று நடத்துகின்றன . தற்போது புத்தகம் எழுத நேரம் இல்லாததால் மூன்றெழுத்துக்குக்களுக்கு கடிதம் எழுதுவது பாராட்டுக்குரியது, வாழ்க வளமுடன், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X