சாம்சன் ஆட்டம் வீண்; ராஜஸ்தான் ஆறாவது தோல்வி

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். ஐதராபாத் அணியில் வார்னர் சேர்க்கப்படவில்லை.ஜெய்ஸ்வால்

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.



latest tamil news



ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். ஐதராபாத் அணியில் வார்னர் சேர்க்கப்படவில்லை.


ஜெய்ஸ்வால் நம்பிக்கை

ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், லீவிஸ் (6) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. சாம்சன், ஜெய்ஸ்வால் இணைந்தனர். ராஜஸ்தான் அணி 6 ஓவரில் 57/1 ரன் குவித்தது. சந்தீப் பந்தை சிக்சருக்கு விரட்டிய ஜெய்ஸ்வால், 23 பந்தில் 36 ரன்னுக்கு அவுட்டானார். லிவிங்ஸ்டன் (4) மறுபடியும் ஏமாற்றம் தந்தார்.


சாம்சன் அரைசதம்

ரஷித் கான் பந்தில் சிக்சர் அடித்த சாம்சன், சித்தார்த் வீசிய 16 வது ஓவரில் 2 சிக்சர், 1 பவுண்டரி என 20 ரன்கள் அடித்தார். தவிர ஐ.பி.எல்., அரங்கில் 15 வது அரைசதம் எட்டினார். தொடர்ந்து புவனேஷ்வர் பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பிய சாம்சன், 57 பந்தில் 82 ரன் எடுத்து அவுட்டானார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. லாம்ரர் (29), டிவாட்டியா (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் சார்பில் சித்தார்த் கவுல் அதிகபட்சம் 2 விக்கெட் சாய்த்தார்.


latest tamil news



ஜேசன் அபாரம்

அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஜேசன் ராய், சகா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்த நிலையில் சகா (18) அவுட்டானார். ஜேசன் ராய் 42 பந்தில் 60 ரன் எடுத்து கைகொடுத்தார். பிரியம் கார்க் 'டக்' அவுட்டானார். வில்லியம்சன் அரைசதம் விளாச, ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் (51), அபிஷேக் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202108:54:21 IST Report Abuse
Tgsoundarrajan Balu அணிக்கு உரிமையாளா் மிரட்டலில் ஹைடிராபாட் அணி பயந்துவெற்றி பெற்றிருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X