பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களை காப்பாற்ற சமுதாய பணிக்கு வாங்க!: சிவாச்சாரியார்களுக்கு ஆர்.ஆர். கோபால்ஜி அழைப்பு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
மயிலாடுதுறை--'சமயப் பணியுடன் நின்றுவிடாமல், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், சமுதாய பணிக்கும் வர வேண்டும்,'' என, திருச்சி 'தினமலர்' வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலையில், மகாளயபட்ச விசேஷ சதுர்வேத பாராயணம், வரும் 5ம் தேதி வரை நடக்கிறது. ஒரு பகுதியாக, கொரோனா பாதித்து இறந்தவர்களின் ஆத்மா

மயிலாடுதுறை--'சமயப் பணியுடன் நின்றுவிடாமல், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், சமுதாய பணிக்கும் வர வேண்டும்,'' என, திருச்சி 'தினமலர்' வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.



latest tamil news


மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலையில், மகாளயபட்ச விசேஷ சதுர்வேத பாராயணம், வரும் 5ம் தேதி வரை நடக்கிறது. ஒரு பகுதியாக, கொரோனா பாதித்து இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய, மகாளயபட்சத்தில் சிறப்பு பிரார்த்தனையும், 201 மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.திருச்சி 'தினமலர்' வெளியீட்டாளரும், தமிழ்நாடு வி.எச்.பி., மாநில தலைவரும், தெய்வீக கைங்கர்ய பேரவைத் தலைவருமான ஆர்ஆர்.கோபால்ஜி தலைமை வகித்து பேசியதாவது:கோவில்கள் கட்டி, இறை தொண்டு செய்த மன்னர்கள், அந்தந்த கோவில்களில் இப்படித்தான் பூஜைகள் நடக்க வேண்டும் என்பதையும், திருவிழாக்கள், சம்பிரதாய முறைகளையும் கல்வெட்டில் குறிப்பிட்டு சென்றுள்ளனர்.


latest tamil news


அதை மாற்றுவதற்கு எந்த அரசுகளுக்கும் அதிகாரம் இல்லை.கோவில்களை பொறுத்தவரை, அதன் சொத்துக்கள், தெய்வத்திருமேனிகள், நகைகளை பாதுகாக்கும் பணியை செய்யும் காவலாளி மட்டுமே, அரசு. கோவில் சம்பிரதாய விஷயங்களில் தலையிடக் கூடாது.தமிழகத்தில், 2 லட்சம் கிராம தேவதை கோவில்கள் உள்ளன. அதை சார்ந்து, 6 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளுக்கு 'ஓட்டுக் கணக்கு' மட்டுமே புரியும். ஓட்டு வங்கி யாரிடம் இருக்கிறதோ, அவர்களிடம் போய் தான் நிற்பார்கள். கோவில்களுக்கு வந்து, தேர்தலில் வெற்றி பெற பூஜை செய்ய சொல்கிறார்களே தவிர, நம்மிடம் வந்து ஓட்டு கேட்பது கிடையாது. சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் சமயத்துடன் நிற்காமல், சமுதாய பணிக்கும் வர வேண்டும். அப்போது தான், கோவில்களை காப்பாற்ற முடியும்.

கோவில்களுக்கு, 6 லட்சம் ஏக்கர் சொத்து, வைப்பு நிதி, உண்டியல் வருவாய் இருந்தும், கோவில்களில் இறை பணி செய்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. அர்ச்சனை டிக்கெட் விற்றால் பங்குதொகை வந்து சேர்வதில்லை. இப்படி மோசமான நிலையில் தான் அறநிலையத்துறை இருக்கிறது. தெய்வீக கைங்கர்ய பேரவையில், ஒரு லட்சம் பேர் இருப்பார்கள். இவர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தினால் தான், அரசு நம்மை திரும்பி பார்க்கும்.இவ்வாறு, ஆர்.ஆர்.கோபால்ஜி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202115:50:15 IST Report Abuse
அப்புசாமி இவா வாங்கறதில் தான் குறியா இருப்பா. இவா எங்கேயாவது 10 பைசா தர்மம் பண்ணி பாத்திருக்கேளா?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
28-செப்-202114:30:31 IST Report Abuse
S. Narayanan அனைத்து கோவில் பாட்டாச்சாரியார்களும் சிவாச்சாரியார்கள் மற்றும் எல்லா ஊழியர்களும் ஒன்று சேர்ந்து கோவில் சொத்துக்களை பாதுகாத்து கடவுளுக்கு ஆகம முறைப்படி பூஜை செய்து நம் ஒற்றுமையை மற்றும் பலத்தை அரசுக்கு நிரூபிக்க வேண்டும். வாருங்கள் ஒன்றிணைவோம் தமிழ். மக்களின் விடியலுக்கு.
Rate this:
Cancel
Suresh Kumar - Salem,இந்தியா
28-செப்-202113:54:35 IST Report Abuse
Suresh Kumar இங்கே சமுதாயப்பணி என்று சொல்லிக்கொண்டு திருடும் திராவிட திருடர்களுக்கு ஈடு இணை யாரும் இருக்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X