நீதிமன்ற பாதுகாப்பு: டில்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-டில்லி நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நாளை நடக்க உள்ளது.டில்லியின் ரோஹினியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று ரவுடிகள் கொல்லப்பட்டனர். நீதிமன்ற வளாகத்துக்குள் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை

புதுடில்லி-டில்லி நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நாளை நடக்க உள்ளது.



latest tamil news


டில்லியின் ரோஹினியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று ரவுடிகள் கொல்லப்பட்டனர். நீதிமன்ற வளாகத்துக்குள் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே, மாவட்ட நீதிமன்றங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என சட்டக் கல்லுாரி மாணவர்கள் 2019ல் டில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளனர்.


latest tamil news


அதன் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.அந்த மனுவை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ரிச்சா சிங் தரப்பில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு முன். நேற்று கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து மாவட்ட நீதிமன்றங்களின் பாதுகாப்பு தொடர்பான மனு நாளை விசாரிக்கப்படும் என, நீதிபதிகள் உறுதி அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202109:20:35 IST Report Abuse
Lion Drsekar இன்று பதுகாப்பு என்பது இரண்டுபிரிவுகளுக்கு மட்டுமே அதுவும் உச்ச கட்ட பாதுகாப்பு உள்ளது ஒன்று முக்கிய பிரமுகர்கள் வாழும் இடங்கள் மற்றொன்று சிறைச்சாலைகளில் இதற்க்கு மேல் என்ன வேண்டும் இத்திருநாட்டில் , வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X