பொது செய்தி

இந்தியா

எல்லையில் வீரர்கள் தங்குமிடங்கள்; மீண்டும் சீண்டும் சீன ராணுவம்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி-கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்னைக்கு முடிவு காணப்படாத நிலையில், லடாக்குக்கு அருகில் தங்கள் எல்லையில், வீரர்கள் தங்குமிடங்களை சீன ராணுவம் உருவாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு கிழக்கு லடாக்கில் நுழைந்து சீன ராணுவம் நம் பகுதியை ஆக்கிரமிக்க முயன்றது. தங்குமிடம்இதையடுத்து நம் படைகள் விரைந்து சென்று, சீன ராணுவத்தின் முன்னேற்றத்தை

புதுடில்லி-கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்னைக்கு முடிவு காணப்படாத நிலையில், லடாக்குக்கு அருகில் தங்கள் எல்லையில், வீரர்கள் தங்குமிடங்களை சீன ராணுவம் உருவாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



latest tamil news


கடந்தாண்டு கிழக்கு லடாக்கில் நுழைந்து சீன ராணுவம் நம் பகுதியை ஆக்கிரமிக்க முயன்றது. தங்குமிடம்இதையடுத்து நம் படைகள் விரைந்து சென்று, சீன ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தின. கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து எல்லையில் இரு நாட்டுப் படைகளும் முகாமிட்டுள்ளன.இரு நாட்டு அரசுகள் மற்றும் ராணுவ நிலைகளில் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டதில், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டுஉள்ளன.

மேலும் சில இடங்களில் தொடர்ந்து படைகள் முகாமிட்டுள்ளன.கடந்த 18 மாதங்களாக இந்தப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், லடாக்குக்கு அருகே எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் தங்கள் வீரர்கள் தங்குவதற்கான வசதிகளை சீன ராணுவம் உருவாக்கியுள்ளதாக பத்திரிகை ஒன்றில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.


latest tamil news


காரகோரம் பாஸ் பகுதியை ஒட்டியுள்ள வாஹாப் ஜில்கா உட்பட எட்டு இடங்களில் இவ்வாறு வீரர்களுக்கான தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.80 - 84 கன்டெய்னர்கள்கன்டெய்னர்களில் மாற்றம் செய்து, இந்த தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வோர் இடத்திலும், தலா, 80 - 84 கன்டெய்னர்கள் பயன்படுத்தப்பட்டுஉள்ளதாகக் கூறப்படுகிறது.இதைத் தவிர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் விமானத் தளம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
28-செப்-202110:49:31 IST Report Abuse
Anand அதான் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக நேற்றைய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா இன்னமும் வலிக்காத மாதிரியே நடிச்சிக்கிட்டிருக்கான்.. அவனை விட இங்குள்ள சீனா கைக்கூலிகளை முதலில் ஒழித்துக்கட்டவேண்டும்...
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
28-செப்-202110:42:26 IST Report Abuse
Sidhaarth ஐம்பத்தாறு இன்ச் இரூந்துமா??? அடேய் சீனா எங்க ஜி உங்கல ஓட ஓட விரட்டுவாரு(கனவுல) ஜாக்கிரதை
Rate this:
Cancel
joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-செப்-202109:13:50 IST Report Abuse
joy அவன் மீண்டும் சீன்டல, அவன் வேலைய அவன் சரியாகதான் செய்துகிட்டு இருக்கான், நாமதான் உஷாரா இருக்கனும், ஏற்கனவே உள்ள வந்துட்டதா கேள்விபடறோம், விட்டா குரங்கு ஆப்பம் சாப்பிட்ட கதையாக கொஞ்ச கொஞ்சமாக உள்ள வந்துகிட்டே இருப்பான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X