டி.எம்.டி., கம்பி ஆலைகளில் ரூ 300 கோடி கறுப்பு பணம்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி-மஹாராஷ்டிராவில் டி.எம்.டி., கம்பிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான நான்கு ஆலைகளில், 300 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் டி.எம்.டி., கம்பிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, மஹாராஷ்டிராவில் உள்ள நிறுவனத்தின் நான்கு ஆலைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை

புதுடில்லி-மஹாராஷ்டிராவில் டி.எம்.டி., கம்பிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான நான்கு ஆலைகளில், 300 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.



latest tamil news


கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் டி.எம்.டி., கம்பிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, மஹாராஷ்டிராவில் உள்ள நிறுவனத்தின் நான்கு ஆலைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் காட்டப்படாத 300 கோடி ரூபாய் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வருமான வரித் துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நிறுவனம், 300 கோடி ரூபாயக்கும் மேலான வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.அவர்களிடம் இருந்து 2.10 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 1.07 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


latest tamil news


மேலும் 12க்கும் மேற்பட்ட வங்கி 'லாக்கர்கள்' பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பாக மேலும் பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளன. இதன் வாயிலாக கணக்கில் வராத தொகையை போலி நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202111:03:02 IST Report Abuse
அருணா கம்பி நல்ல Strong. அதைவிட Strong ஆக சிறை கம்பி இரு( று) க்குமா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202110:33:58 IST Report Abuse
duruvasar தமிழர்களுக்கான உருக்கு கம்பி ஆலை இங்கு இருக்கிறது. அங்கு வந்துடாதீங்க.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
28-செப்-202108:49:06 IST Report Abuse
சீனி கோபி-சுதாகர் காமெடி மாதிரி "வரி கட்டாம கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுறானே..." என்கிற மாதிரி இருக்கே.... ஹஹஹா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X