பொது நல மனு விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி-'நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்பவர்கள், முன்னதாக தகவல்களை சேகரித்து அது குறித்து தயார் செய்த பின் நீதிமன்றத்தை அணுக வேண்டும். சூரியனுக்கு கீழ் உள்ள அனைத்தையும் அவர்கள் ஒரே மனுவில் கோரக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.விசாரணைதெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க தலைவர் அஞ்சி ரெட்டி என்பவர்,

புதுடில்லி-'நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்பவர்கள், முன்னதாக தகவல்களை சேகரித்து அது குறித்து தயார் செய்த பின் நீதிமன்றத்தை அணுக வேண்டும். சூரியனுக்கு கீழ் உள்ள அனைத்தையும் அவர்கள் ஒரே மனுவில் கோரக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது



latest tamil news



.விசாரணை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க தலைவர் அஞ்சி ரெட்டி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம்:நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் சுகாதார நலனை மனதில் வைத்து, தேசிய சுகாதார திட்டம் 2017ல் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.கொரோனா காலக்கட்டத்தில் பலர் மருத்துவ சிகிச்சைக்காக கடன் பெற்று சொந்த பணத்தை செலவழித்துள்ளனர்.தேசிய சுகாதார திட்டம் அமல்படுத்தப்பட்டு இருந்தால் அவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைத்திருக்கும். இது தொடர்பாக 1996ல், இந்த நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. எனவே தேசிய சுகாதார திட்டத்தை உடனடியாக அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது போன்ற பொது நல மனுவில் நீங்கள் வரிசையாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கிறீர்கள். அது குறித்து முன் தயாரிப்புகள், உதாரணங்கள் எதுவும் இன்றி நீதிமன்றத்தை நாடுகிறீர்கள்.


latest tamil news




மீண்டும் மனு தாக்கல்

பொது நல மனுக்களில் சூரியனுக்கு கீழ் இருக்கும் அனைத்தையும் மனுதாரர் கோரக்கூடாது. ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து கோரிக்கை விடுத்தால், அதை நீதிமன்றம் தெளிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும்.எனவே மனுதாரர் மனுவை திரும்பப் பெற அனுமதி அளிக்கப்படுகிறது. சரியான தகவல்களை சேகரித்து மீண்டும் மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதிக்கிறது.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202110:31:59 IST Report Abuse
duruvasar தற்சமயம் தமிழ்நாட்டில் ராம.(சாமி) ராஜ்யம் நடைபெறுவதால் இந்த மாதிரியான தமிழ்நாடு சம்பந்தபட்ட எந்த வழக்கும் வராது. தமிழின துரோகி மோடி அரசுக்கு எதிராக மட்டுமே வழக்குகள் தொடரப்படும் என்பதை தமிழக சமூக ஆர்வலர்கள், சமூகநீதி காப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் வாக்குறுதி அளிக்கமுடியும். மகிழ்ச்சி தானே.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-செப்-202108:56:11 IST Report Abuse
RajanRajan இப்படி மாறிமாறி டி ஆத்திக்குவானுங்களோ காலம் பூராவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X