பி.எஸ்.என்.எல்., டெண்டர் நிறுத்த கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பி.எஸ்.என்.எல்., டெண்டர் நிறுத்த கோரிக்கை

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021
Share
புதுடில்லி-கேரளாவின் கொச்சியில் இருந்து லட்சத்தீவைச் சேர்ந்த, 11 தீவுகளுக்கு அகண்ட அலைவரிசை சேவை வழங்க, கடலுக்கடியில் கண்ணாடி நாரிழை கம்பிகள் பதிக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல்., செயல்படுத்த உள்ளது.இது குறித்து 'நிடி ஆயோக்' உறுப்பினர் வி.கே.சரஸ்வத் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பி.எஸ்.என்.எல்., வெளி யிட்டுள்ள ஒப்பந்தப் புள்ளியில்
bsnl, tender, பி.எஸ்.என்.எல்., டெண்டர், நிறுத்த கோரிக்கை

புதுடில்லி-கேரளாவின் கொச்சியில் இருந்து லட்சத்தீவைச் சேர்ந்த, 11 தீவுகளுக்கு அகண்ட அலைவரிசை சேவை வழங்க, கடலுக்கடியில் கண்ணாடி நாரிழை கம்பிகள் பதிக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல்., செயல்படுத்த உள்ளது.

இது குறித்து 'நிடி ஆயோக்' உறுப்பினர் வி.கே.சரஸ்வத் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பி.எஸ்.என்.எல்., வெளி யிட்டுள்ள ஒப்பந்தப் புள்ளியில் திட்டமிட்டு இந்திய நிறுவனங்கள் பங்கேற்க முடியாதபடி, அன்னிய நிறுவனங்களுக்கு சாதகமான விதிமுறைகள் உள்ளன. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இத்திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் ஒப்பந்தப் புள்ளியை பி.எஸ்.என்.எல்., திருத்தி வெளியிட வேண்டும்.


latest tamil news


அதுவரை ஒப்பந்தப் புள்ளி தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பி.எஸ்.என்.எல்., ஒப் பந்தப் புள்ளி தொடர்பாக தொலை தொடர்பு சாதன தயாரிப்பாளர்கள் கூட்ட மைப்பு, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X