ஜின்னா சிலை பாக்.,கில் தகர்ப்பு| Dinamalar

ஜின்னா சிலை பாக்.,கில் தகர்ப்பு

Added : செப் 28, 2021 | கருத்துகள் (3) | |
கராச்சி-பாகிஸ்தானில், அதன் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.நம் அண்டை நாடான பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னா, அந்த நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 1948ல் காலமானார்.இவர் தன் கடைசி நாட்களில் வசித்து வந்த குடியிருப்பு கட்டடம், தேசிய நினைவுச் சின்னமாக

கராச்சி-பாகிஸ்தானில், அதன் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னா, அந்த நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 1948ல் காலமானார்.இவர் தன் கடைசி நாட்களில் வசித்து வந்த குடியிருப்பு கட்டடம், தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 121 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம், பலுாசிஸ்தான் மாகாணத்தின் ஜியாரத் பகுதியில் இருந்தது.



எனினும் 2013ல் பலுாச் பயங்கரவாதிகளால் அந்த கட்டடம் தகர்க்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதில், அந்த கட்டடம் முழுதும் சேதமடைந்தது. இந்நிலையில் இந்த மாகாணத்தின் குவாடர் பகுதியில் இருந்த முகமது அலி ஜின்னாவின் சிலையும், நேற்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் கடற்கரை நகரமான இங்கு, சமீபத்தில் தான் இந்த சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை தகர்ப்பு சம்பவம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பாக்., ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X