ஏதென்ஸ்-தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசின் கிரீட் தீவில் உள்ள ஹெராக்லியன் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அனைவரும் சாலைகளில் குவிந்தனர்.பள்ளிகளில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கம் சிறிய அதிர்வுகளுடன் பலமுறை தொடர்ந்தது. அதிகபட்சமாக 5.8 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கம் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், ஒரு தேவாலயம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்; ஒன்பது பேர் காயமடைந்தனர்.