நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகத்துக்கு நான்கு மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு ஏழு மாதம் அவகாசம் கேட்பதற்கான காரணம், அற்பமாக உள்ளதாகக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், நான்கு மாதம் மட்டும் அவகாசம் அளித்து, தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 டிசம்பரில் நடந்தன. அப்போது விடுபட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில்

புதுடில்லி-தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு ஏழு மாதம் அவகாசம் கேட்பதற்கான காரணம், அற்பமாக உள்ளதாகக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், நான்கு மாதம் மட்டும் அவகாசம் அளித்து, தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 டிசம்பரில் நடந்தன. அப்போது விடுபட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு, இந்தாண்டு செப்., 15 வரை அவகாசம் அளித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு அவகாசம் கேட்டு, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சமீபத்தில் இதை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, 'ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு தேர்தல் நடத்த அவகாசம் கேட்பது பொருந்தாது' என, கூறியது. அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஏழு மாதம் அவகாசம் கேட்டுள்ளதை தொடர்ச்சி 7ம் பக்கம்நகர்ப்புற உள்ளாட்சி...முதல் பக்கத் தொடர்ச்சி ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தது.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த எவ்வளவு நாட்கள் அவகாசம் வேண்டும்' என, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம், தலைமை நீதிபதி அமர்வு கேட்டது.அதற்கு முகுல் ரோஹத்கி கூறியதாவது:தமிழகத்தில் புதிதாக ஆறு மாநகராட்சிகளும், 28 நகராட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனால் ஏழு மாதங்கள் அவகாசம் வேண்டும். வரும் 2022, ஏப்., மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி முடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த ஏழு மாதம் அவகாசம் கேட்பதற்காக கூறியுள்ள காரணம், ரொம்ப அற்பமாக உள்ளது. உங்களுக்கு நான்கு மாதங்கள் அவகாசம் வழங்குகிறோம்; அதற்குள் தேர்தல் நடத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202108:47:55 IST Report Abuse
duruvasar இந்த அறிவுறுத்தல் ,வாக்குறிதிகளை நிறைவேற்ற நீதிமன்றங்கள் வாயிலாக கொடுக்கப்படும் அழுத்தமாகவே தெரிகிறது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202108:45:32 IST Report Abuse
Lion Drsekar சீக்கிரமாக நடத்துங்கள் எந்த ஒரு அமைப்பாலும் மக்களுக்கு எந்த ஒரு பலனும் இருக்கப்போவது இல்லை, அவர்களாவது ஜனயாக சுதந்திரத்தை அனுபவிக்கட்டும், செல்ல செழிப்புடன் வளரட்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
28-செப்-202108:00:36 IST Report Abuse
Loganathan Kuttuva கொரோனா தாக்கம் முற்றிலும் நீங்கும் வரை தேர்தல் நடத்துவது தவறு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X