ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான வழக்கு சென்னை ஐகோர்ட் விசாரிக்க உத்தரவு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி-ஐ.பி.எஸ்., அதிகாரி முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை தெலுங்கானாவுக்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 2018ல், பாலியல் தொல்லை கொடுத்ததாக, அப்போதைய லஞ்ச ஒழிப்பு துறை இணை இயக்குனரான முருகன் மீது, பெண் எஸ்.பி., ஒருவர் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க

புதுடில்லி-ஐ.பி.எஸ்., அதிகாரி முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை தெலுங்கானாவுக்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.latest tamil news


தமிழகத்தில் 2018ல், பாலியல் தொல்லை கொடுத்ததாக, அப்போதைய லஞ்ச ஒழிப்பு துறை இணை இயக்குனரான முருகன் மீது, பெண் எஸ்.பி., ஒருவர் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவும், அப்போதைய மாநில அரசும், முருகனுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி, விசாரணையை தெலுங்கானா மாநில போலீசுக்கு மாற்ற, பெண் எஸ்.பி., சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை தெலுங்கானாவுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், 'சமீபத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் முருகன் மீதான பாலியல் விசாரணையை தமிழகத்திலே நடத்த உத்தரவிட வேண்டும்' என, அவர் கோரியிருந்தார். அதிகாரம் இல்லைஇந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர். சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:பாலியல் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என, எதிர்தரப்பு தெரிவித்துள்ளதால், அதை மீண்டும் ஆராய இந்த அமர்வு விரும்பவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர் அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில், விசாரணையை மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-செப்-202109:06:18 IST Report Abuse
அசோக்ராஜ் //"சமீபத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் முருகன் மீதான பாலியல் விசாரணையை தமிழகத்திலே நடத்த உத்தரவிட வேண்டும்'"// சூப்பர். தமிழ்நாட்டில் சட்டத்தின் கடமையும் நீதி வழங்கலும் அரசியல் தலைமையைப் பொருத்து மாறும் என்று நீதி மன்றம், போலீஸ் துறை, பிராசிக்யூஷன் மூன்றுமே ஏற்றுக்கொள்கின்றன. யாருக்கும் வெட்கமில்லை. இந்த செய்தியைப் படிப்பவன் எவனாவது கோர்ட் படியை அண்டுவானா? ஆலந்தூர் ஆரெஸ்பி வால்க. திராவிஷம் வெல்க.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-செப்-202108:42:45 IST Report Abuse
RajanRajan கடும் கட்டுப்பாடுகள் மிக்க துறைகளான ராணுவம் கடற்படை விமானப்படை காவல்துறை போன்றவற்றின் செயல்பாடுகள் ஊடுருவி நிற்பதை ஒரு உன்னதமான கட்டுக்கோப்பான கட்டுப்பாடுகள் தான். அங்கே பெண்களை பணிக்கு அமர்த்தினால் என்னவாகும். இருவரில் ஒருவர் ஆகா என்றால் போதும் இருவருமே பீல்டு அவுட் ஆயிடுவாங்களே. இதை ஏன் அரசும் நீதிமன்றங்களும் சிந்திப்பதில்லை??
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202108:40:06 IST Report Abuse
Lion Drsekar இதற்க்கு முன்பு மூன்றெழுத்து தேர்வில் ஏமாற்றி பதவியில் சேர்ந்தார்கள் என்று ஒரு பட்டியல் வெளிவந்தது, அனைவர் மனத்திலும் ஆழமாக பதிந்த அந்த செய்திக்குப் பிறகு பதவி ஏற்ற ஒரு அதிகாரிக்கும் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் போனது மறக்க முடியாது, செய்தி செய்தியாகவே மறைகிறது, வாழ்த்துக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X