பொது செய்தி

தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை; ஆறுகளில் வெள்ளப் பெருக்கு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நாகர்கோவில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடிய கொட்டிய மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கீரிப்பாறை பகுதியில் மண்பாலத்தை தண்ணீர் அடித்து சென்றது.கடந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் மதியத்துக்கு பின்னர் மேகமூட்டம் ஏற்பட்டு மாலை 4:00 மணி துவங்கிய மழை வலுத்து நேற்று காலை வரை

நாகர்கோவில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடிய கொட்டிய மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கீரிப்பாறை பகுதியில் மண்பாலத்தை தண்ணீர் அடித்து சென்றது.



latest tamil news


கடந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் மதியத்துக்கு பின்னர் மேகமூட்டம் ஏற்பட்டு மாலை 4:00 மணி துவங்கிய மழை வலுத்து நேற்று காலை வரை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறு, கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கிய அணையான பேச்சிப்பாறையில் நள்ளிரவில் நீர்வரத்து ஏழாயிரம் கன அடியாக அதிகரித்தது. 48.00 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையில் 44.30 அடி தண்ணீர் இருந்ததால் உடனடியாக மூவாயிரத்து 500 கனஅடி தண்ணீர் உபரி நீராக திறந்து விட்டது.

இதனால் குழித்துறை தாமிரபரணி, கோதையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திற்பரப்பில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதுபோல பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.மழையுடன் சூறை காற்றும் வீசியதால் பல இடங்களிலும் மின்கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டது. நேற்று மாலைக்கு பின்னர் தான் மின்சாரம் வழங்கப்பட்டது.


latest tamil news


மலையோரங்களில் மழை அதிகமாக இருந்ததால் கீரிப்பாறை லேபர் காலனிக்கு செல்லும் தற்காலிக மண் பாலத்தை தண்ணீர் அடித்து சென்றது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.நேற்று மலையோரங்களில் சாரல்மழை நீடித்தது. சூறைகாற்று வீசி வருகிறது. அணைகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் வெயில் அடிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
28-செப்-202106:47:24 IST Report Abuse
 N.Purushothaman தமிழகத்தின் சிறிய சிரபுஞ்சி என்று சொல்ல கூடிய அளவிற்கு மழைப்பொழிவை தரும் கன்னியாகுமரியில் இருந்து வறட்சியான ராமநாதபுரம் ,சிவகங்கை போன்ற மாவட்டங்களில் ஓடும் நதிகளுடன் இணைத்தால் அம்மாவட்ட மக்கள் மிகுந்த பலன்களை பெறுவார்கள் ....மக்களை எப்போதும் கையேந்தியே வைத்திருக்கும் நிலையும் மாறும் ...
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
28-செப்-202106:28:36 IST Report Abuse
kijan அவ்வளவு நீரும் கடலுக்குள் தாராளமாக போகலாம் ...ஆனால் ராதாபுரத்திற்கு மட்டும் சென்றுவிடக்கூடாது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X