தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி; நாடு முழுதும் ஏழு இடங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அவற்றில் இரண்டை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேற்று டில்லி வந்திருந்தார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து

புதுடில்லி; நாடு முழுதும் ஏழு இடங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அவற்றில் இரண்டை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேற்று டில்லி வந்திருந்தார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து பேசினார்.latest tamil news


அப்போது அவர் விடுத்த கோரிக்கை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நில மேம்பாட்டிற்கு நிதி தேவைப்படுகிறது. தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, யானைகள் வழித்தட மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேபோல, டில்லி வந்திருந்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.அப்போது, தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் தடம் எனப்படும், 'டிபன்ஸ் இண்டஸ்ட்ரியல் காரிடாரை' அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயலையும் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தார்.


latest tamil news


இந்தச் சந்திப்பின் போது உடன் இருந்த தி.மு.க., மூத்த எம்.பி., - டி.ஆர்.பாலு கூறியதாவது:நாடு முழுதும் ஏழு இடங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் இரண்டை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என, அமைச்சர் பியுஷ் கோயலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும்; மக்களின் எதிர்ப்பை மீறி இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்ட போது, அதற்கென உள்ள குழுவிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என, அமைச்சர் உறுதியளித்தார். தமிழகத்திற்கு என வாரந்தோறும் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், அமைச்சர் உறுதியளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
28-செப்-202119:15:43 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கொள்ளு என்றால் வாய் திரப்பதும் கடிவாளம் என்றால் வாய்மூடுவதோ...மையஅரசின் சீரியகொள்கைகளை சட்டங்களை அடிப்படை ஆதார காரண காரியமின்றி எதிர்ப்பதும் வாடிக்கையாய் உள்ள நீங்கள் கேட்டபது அவ்வளவு பெருந்தன்மையான
Rate this:
Cancel
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
28-செப்-202110:31:30 IST Report Abuse
Ranjith Rajan நீங்கோ பூங்கா வைங்கோ.. பார்க் வைங்கோ. சாய கழிவுகளை மட்டும் வச்சுக்கோங்கோ. கூவம் நாறிடுச்சு, நொய்யல் நாறிடுச்சு, பவானி நாறிடுச்சு, பாலாறு நாறிடுச்சு, காவிரி நாறிடுச்சு மிச்ச மீதி ஆற்றை நாறடிக்காதீங்கோ
Rate this:
Cancel
28-செப்-202109:02:42 IST Report Abuse
Gopalakrishnan S உங்களுக்கு எட்டு வழி சாலை வேண்டாம் மீத்தேன் வாயு வேண்டாம் . ஓ.என்.ஜி.ஸி. குழாய்கள் பதிக்க வேண்டாம். தொழிற்சாலைகள் மட்டும் வேண்டும். தொழிற்சாலைகள் மந்திரத்தால் ஓடும் - உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், விட்டலாச்சார்யா படங்களில் வருவது போல் தானே நகர்ந்து கொண்டே சந்தைகளுக்கு செல்லும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X