பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் அக்., 1ல் விருப்ப பதிவு துவக்கம்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, அக்., 1ம் தேதி விருப்ப கல்லுாரிகளுக்கான பதிவு துவங்க உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 440 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங் 17ம் தேதி துவங்கியது.6,000 இடங்கள் ஒதுக்கீடுமொத்தம் 1.52 லட்சம் இடங்களுக்கு 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், சிறப்பு


சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, அக்., 1ம் தேதி விருப்ப கல்லுாரிகளுக்கான பதிவு துவங்க உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 440 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங் 17ம் தேதி துவங்கியது.



latest tamil news



6,000 இடங்கள் ஒதுக்கீடு

மொத்தம் 1.52 லட்சம் இடங்களுக்கு 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடந்துள்ளது.இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, பொது பிரிவில் சேரும் மாணவர்களுக்கான, கட்டணம் செலுத்தும் வசதி நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், 14 ஆயிரத்து 788 வரை உள்ளவர்கள் மட்டும், 30ம் தேதி மாலை 5:00 மணி வரை கவுன்சிலிங் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



உத்தேச ஒதுக்கீடு

இந்த மாணவர்களுக்கு, அக்., 1ம் தேதி முதல் விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாட பிரிவுகளுக்கான பதிவு துவங்கி, 2ம் தேதி முடிகிறது. 3ம் தேதி உத்தேச ஒதுக்கீடும், 5ம் தேதி இறுதி ஒதுக்கீடும் வழங்கப்படும்.இதையடுத்து, தரவரிசைபட்டியலில் இரண்டு, மூன்று, நான்காம் கட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு, படிப்படியாக கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் விருப்ப பதிவு நடந்து இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, www.tneaonline.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X