போலீஸ் வாகனத்தை இடித்த காரில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்; இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்தடம் புரண்ட ரயில்மும்பை: மஹாராஷ்டிராவின் புனே மாவட்ட மலைப்பகுதியில் உள்ள லோனாவ்லா ரயில்வே ஸ்டேஷனுக்குள் நேற்று இந்துார் - டவுண்ட் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரயிலின் பின்பகுதியில் இருந்த இரு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் பயணியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.வெள்ளம்: 2 பேர் பலிபீட்: மஹாராஷ்டிராவின்
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்தடம் புரண்ட ரயில்

மும்பை: மஹாராஷ்டிராவின் புனே மாவட்ட மலைப்பகுதியில் உள்ள லோனாவ்லா ரயில்வே ஸ்டேஷனுக்குள் நேற்று இந்துார் - டவுண்ட் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரயிலின் பின்பகுதியில் இருந்த இரு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் பயணியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

வெள்ளம்: 2 பேர் பலி

பீட்: மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டம் சிஞ்ச்பூர் கிராமத்தில் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் மழை நீர் பெருக்கெடுத்த பாலம் வழியாக பைக்கில் சென்ற இருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தண்ணீரில் மூழ்கி பலியான அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

முதல்வர் சகோதரரிடம் விசாரணை

புதுடில்லி: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் மூத்த சகோதரர் அக்ராசேன் கெலாட். தொழில்திபரான இவரது நிறுவனங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத் துறை யினர் சோதனை நடத்தியபின், அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை அமைப்புடன் ஒத்துழைக்கும்படி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சமீபத்தில் அவருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் விசாரணைக்காக அக்ராசேன் கெலாட் நேற்று ஆஜரானார்.

டி.எம்.டி., கம்பி நிறுவனத்தில் ரூ 300 கோடி கறுப்பு பணம்

புதுடில்லி,-மஹாராஷ்டிராவில் டி.எம்.டி., கம்பிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான நான்கு ஆலைகளில், 300 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் டி.எம்.டி., கம்பிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, மஹாராஷ்டிராவில் உள்ள நிறுவனத்தின் நான்கு ஆலைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் காட்டப்படாத 300 கோடி ரூபாய் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வருமான வரித் துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நிறுவனம், 300 கோடி ரூபாயக்கும் மேலான வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.அவர்களிடம் இருந்து 2.10 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 1.07 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.மேலும் 12க்கும் மேற்பட்ட வங்கி 'லாக்கர்கள்' பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பாக மேலும் பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளன. இதன் வாயிலாக கணக்கில் வராத தொகையை போலி நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தமிழக நிகழ்வுகள்

மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சென்னாமலை கரடு, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ஜாபர் சேட், 56. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.இதன்காரணமாக, கணவன், மனைவிக்கு இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனைவி, ஜாபர் சேட்டைத் திட்டியுள்ளார். இதனால், வெறுப்படைந்த அவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


latest tamil news


போலீஸ் வாகனத்தை இடித்த காரில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரவாயல் : போலீஸ் வாகனத்தை இடித்த காரை, துரத்தி சென்று பிடித்து ஆய்வு செய்ததில், 300 கிலோ கஞ்சா காருக்குள் சிக்கியது.போரூர் காவல் நிலையத்தில், போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் ஜேம்ஸ், 38. இவர், நேற்று காலை பணிக்கு செல்ல, தாம்பரம்-- மதுரவாயல் புறவழிச்சாலையில், போரூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது, அவரது பின்னால் வந்த கார், இருசக்கர வாகனம் மீது லேசாக உரசி, நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து, போக்குவரத்து காவலர் அந்த காரை விரட்டிச் சென்றார்.போலீசார் விரட்டி வருவதை அறிந்த மர்ம நபர்கள், காரை வேகமாக ஓட்டி தப்ப முயன்றனர். போரூர் சுங்கச்சாவடி அருகே காவலர் காரை மடக்கியதும், காரில் இருந்த இரண்டு மர்ம நபர்கள், காரை நிறுத்தி, அங்கிருந்து தப்பி ஓடினர்.சந்தேகமடைந்த காவலர், காரை சோதனை செய்தபோது,

அதில், கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தி வந்த காரை, மதுரவாயல் போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார்.போலீசாரின் விசாரணையில், காரில், 300 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. காரின் உரிமையாளர்கள் யார், கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, காரில் இருந்து தப்பி ஓடியவர்கள் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

பேருந்து பயணியின் மடிக்கணினி ஆட்டை

கோயம்பேடு : அரசு விரைவு பேருந்தில், கோயம்பேடு வந்த பயணியின் மடிக்கணினி மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 38. இவர், மேடவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகிறார். ஓசூரில் இருந்து, அரசு விரைவு பேருந்து வாயிலாக, கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார்.அப்போது, இருக்கையின் கீழ் அவர் வைத்த பைப்பை மாயமானது தெரியவந்தது. அந்த பையில் மடிக்கணினி இருந்தது. இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news


இலங்கைக்கு கடத்த முயற்சி ரூ.1.50 கோடி கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினம்-நாகையில் இருந்து, படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற, 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு, நாகை கீச்சாங்குப்பம் கடற்கரை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, நான்கு பைக்குகளில் வந்த எட்டு பேரில் நால்வர், அங்கு நின்ற பைபர் படகில் ஏறினர். மற்ற நால்வர், பைக்குகளில் இருந்த பார்சல்களை படகுகளில் ஏற்றினர். பார்சல்களை படகில் உள்ள ஐஸ் பெட்டியில் வைத்ததும், படகு புறப்பட தயார் ஆனது.மறைந்து நின்ற சுங்கத்துறையினர் விரைந்து சென்று படகில் ஏறினர்.

அதிர்ச்சிஅடைந்த படகில் இருந்த நால்வர், கடலில் குதித்து தப்பினர். பைக்கில் வந்த நால்வர், பைக்குகளை நிறுத்தி, தப்பியோடினர்.தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் படகு, நான்கு பைக்குகளை பறிமுதல் செய்து, நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

படகில், 10 மூட்டைகளில் பண்டல்களாக 280 கிலோ கஞ்சா இருப்பதும், சர்வதேச சந்தை மதிப்பு 1.50 கோடி ரூபாய் என்பதும் தெரிந்தது.தப்பியோடிய எட்டு பேர் யார், படகின் உரிமையாளர் யார், கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

ரூ.14 லட்சம் மோசடி: 2 நைஜீரியர்கள் கைது

புதுச்சேரி-புதுச்சேரி பெண்ணிடம் 'பேஸ்புக்' மூலம் பழகி, 13.65 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவரை, டில்லியில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் மனோகரன்; டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.அபராதம்இவரது மனைவி ஜெயந்தி, 42; இவருக்கு, பேஸ்புக் மூலம் எரிக்வால்கர் என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார்.தன்னை இங்கிலாந்து டாக்டர் என அறிமுகப்படுத்தி, ஜெயந்தியுடன் பழகி வந்தார். ஜெயந்தியின் மகள் பிறந்த நாளுக்காக, தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் அனுப்பி உள்ளதாக கூறினார்.ஜூலை 26ல், ஜெயந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்ட பெண், டில்லி விமான நிலைய அதிகாரி அங்கீதா பேசுவதாக கூறி உள்ளார். இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள பார்சலில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதால், அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

அவர் கூறிய வங்கி கணக்கு எண்ணில் ஜெயந்தி, 13.65 லட்சத்தை நான்கு தவணையில் செலுத்தினார். ஆனால் பரிசுப்பொருள் வரவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயந்தி, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.அங்கீதா பெயரில் ஜெயந்தியை தொடர்பு கொண்ட மொபைல் எண்ணை விசாரித்தனர். அந்த நபர் டில்லியில் வசிப்பது தெரிந்தது. சைபர் கிரைம் போலீசார் டில்லி சென்று, அங்கு பதுங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பேட்ரிக், 47; ஒனுகா அந்தோணி, 37, ஆகியோரை கைது செய்தனர்.

பெண் குரல்ஒனுகா அந்தோணி, எரிக்வால்கர் என்ற பெயரிலும், பேட்ரிக், அங்கீதா பெயரில் பெண் குரலில் பேசி ஏமாற்றியதும் தெரிந்தது. இருவரையும் நேற்று புதுச்சேரி அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் எப்படி மோசடி செய்வது என பயிற்சி பெற்று, இந்தியா முழுதும் பலரிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டு வந்துஉள்ளனர். இருவரது மொபைல் போன்களில், வெளிநாட்டினரின் புகைப்படங்கள் அடங்கிய பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி, மோசடியில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.


உலக நிகழ்வுகள்

பாக்.,கில் ஜின்னா சிலை தகர்ப்பு

கராச்சி-பாகிஸ்தானில், அதன் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.நம் அண்டை நாடான பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னா, அந்த நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார்.

காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 1948ல் காலமானார்.இவர் தன் கடைசி நாட்களில் வசித்து வந்த குடியிருப்பு கட்டடம், தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 121 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம், பலுாசிஸ்தான் மாகாணத்தின் ஜியாரத் பகுதியில் இருந்தது. எனினும் 2013ல் பலுாச் பயங்கரவாதிகளால் அந்த கட்டடம் தகர்க்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதில், அந்த கட்டடம் முழுதும் சேதமடைந்தது. இந்நிலையில் இந்த மாகாணத்தின் குவாடர் பகுதியில் இருந்த முகமது அலி ஜின்னாவின் சிலையும், நேற்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் கடற்கரை நகரமான இங்கு, சமீபத்தில் தான் இந்த சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை தகர்ப்பு சம்பவம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பாக்., ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
28-செப்-202116:17:01 IST Report Abuse
DVRR பாக்.,கில் ஜின்னா சிலை தகர்ப்பு??இது மாதிரி நம்ம நாட்டில் எப்போ நடக்குமோ என்று ஆவலாக இருக்கின்றோம்????
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-செப்-202116:15:01 IST Report Abuse
DVRR போலீஸ் வாகனத்தை இடித்த காரில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்?? மேலே உள்ள போட்டோவில் பார்க்கும்போது தெரிவது மிஞ்சிமிஞ்சி போனால் 30 கிலோ தான் இருக்கும்??கஞ்சா என்றால் நம் புகையிலை மாதிரி தான்??? அப்பன் வீட்டு சொத்தா போகுது ஒரு சைபர் போடு அது பின்னாலே என்று சொல்வது போல இருக்கின்றது ஒரு மாருதி கார் பின்னல் 300 கிலோ கஞ்சா என்பது அந்த காரில் 300 கிலோ உட்கார்ந்தால் அந்த கார் மிக மிக மிக மெதுவாகத்தான் செல்லும் அதாவது 5 ஆட்கள் காருக்குள் அமர்ந்து போவது போல???? நம்ம போலீஸ் எல்லாம் நம்ம திராவிஷ மந்திரி சேகர் (பாபர்) இல்லே மாசு மாதிரியே உளறுதலில் பெரிய பட்டம் தான் வாங்கியிருக்கும் போலெ????300 கிலோ லாரியில் கடத்தப்படும் காரில் அல்லவே அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X