பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அன்னதானத்தால் யாருக்கு பலன்?

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (135)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:திருத்தணி, திருச்செந்துார், சமயபுரம் கோவில்களில் மூன்று வேளை அன்னதானம் தரும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் துவக்கி வைத்துள்ளது; நல்ல விஷயம் தான்.'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்பது போல,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:latest tamil newsதிருத்தணி, திருச்செந்துார், சமயபுரம் கோவில்களில் மூன்று வேளை அன்னதானம் தரும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் துவக்கி வைத்துள்ளது; நல்ல விஷயம் தான்.'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்பது போல, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு சாப்பாடு போடுவது புண்ணியமான செயல் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால், தமிழக அரசின் இந்த திட்டத்தால், உண்மையில் பயனடைய போவது யார் என்பதில் சந்தேகம் உள்ளது. உடுப்பி, தர்மஸ்தலா, சிருங்கேரி, மந்திராலயம், திருப்பதி போன்ற பிற மாநில ஆலயங்களில் அளிக்கப்படும் அன்னதானத்திற்கும், நம் தமிழக ஆலயங்களில் அளிக்கப்படும் அன்னதானத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.பிற மாநில கோவில்களில், பக்தர்களை இன்முகத்துடன் வரவேற்று, அன்பாக உணவு பரிமாறப்படுகிறது; உணவும் தரமாக, சுவையாக இருக்கிறது.தமிழக கோவில்களில், பெரும்பாலும் பிச்சைக்காரர்களும், சுற்றியுள்ள கடைக்காரர்களும் தான் அன்னதானம் சாப்பிடுகின்றனர்.


latest tamil news
இன்னும் சில கோவில்களில் தயாரிக்கப்படும் உணவு, அலுவலர்களின் வீட்டுக்கு தினமும் எடுத்து செல்லப்படுகின்றது.இப்போது புதிதாக தமிழக அரசு துவங்கியுள்ள இந்த திட்டமும், அப்படித் தான் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.தினமும் 7,500 பேருக்கு சாப்பாடாம். கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இதில், ஆளுங்கட்சியினரும், அரசு அதிகாரிகளும் அடிக்க போகும் கொள்ளையை நினைத்து பாருங்கள்.கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் மூடப்பட்டிருக்கிறது. மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருவர். இப்போது, பக்தர்கள் வருகை மிக குறைவாக தான் இருக்கும்.

கோவிலில், ஒரு வேளைக்கு 2,500 பேருக்கு உணவு என்பதெல்லாம் அகலக்கால். நிச்சயமாக இத்தனை பேருக்கு உணவு தயாராக போவதில்லை. அதிகாரிகள் அப்படி கணக்கு காட்டி அரசு நிதியை, 'ஸ்வாஹா' செய்வர். நம் தமிழக கோவில்களில், பக்தர்களை விட, சோம்பேறியாய் சுற்றித் திரியும் கும்பல் உடல் வளர்க்க தான், அன்னதானம் திட்டம் உதவும்.சோம்பேறிகளை வளர்க்கும், அதிகாரிகள் மோசடி செய்ய வாய்ப்பை கொடுக்கும் இந்த அன்னதான திட்டத்தை நிறுத்துங்கள்.சாப்பாட்டுக்கு பதிலாக, வருகிற பக்தர்களுக்கு புளியோதரை, தயிர்சாதம், பொங்கல் போன்ற பிரசாதங்களை பொட்டலமாய் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.கோவிலுக்கு வரும் பக்தனிடம் தரிசனத்துக்கு பணம் வாங்குவதை நிறுத்துங்கள்; அதுஇந்த அன்னதானத்தை விடவும் உத்தமமானது.

Advertisement
வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
02-அக்-202115:44:34 IST Report Abuse
Nesan அன்னதானத்தால் முழு பலன் அரசியல்வாதிக்கும், அதிகாரிகளுக்கும். பொய் கணக்கு எழுதி சம்பாரிக்க இப்படி ஒரு அண்ணா தானம். கடவுளுக்கு தான் வெளிச்சம்,
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
29-செப்-202112:38:15 IST Report Abuse
Bharathi இந்த திருட்டு கட்சி தூக்கி வெச்சி கொண்டாடற NSK ஒரு குலேபகாவலி படத்துல பாடுவார் - அன்ன சத்திரங்கள் இருப்பது எதனாலே, திண்ணை தூங்கி தடியர்கள் இருப்பதாலே. கோயில்ல அன்னதானம் பண்றது யாத்ரீகர்கள் பக்தர்களுக்கு. இவங்க பண்றது டாஸ்மாக் தண்டங்களுக்கு.
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
29-செப்-202108:43:47 IST Report Abuse
Palanisamy T கருணாநிதி ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தவர். கோவில்களில் நல்ல சீர்திருத்தங்களை மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம் அவர் செய்யவில்லை ஹிந்துக்களை குறைச் சொல்வதிலேயே காலம் தள்ளினார். இன்றைய முதல்வர் அவர்கள் இந்த நல்ல மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் கொண்டு வரவேண்டும். அரசு நிர்வாகத்திலும் ஆட்சியாளர்களிடமும் உள்ள ஊழல்களை அவர் கட்டுப் படுத்த வேண்டும். ஒரு நாட்டின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் இதுதான் உயிர்நாடி. இதை நாம் அவருக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை. நாளைய திமுக வின் எதிர்க்காலமே இன்றைக்கு அவரின் இன்றைய ஐந்து ஆண்டுக் காலம் அவர் கைய்யிலுள்ளது. இல்லையென்றால் மக்கள் இனி மேல் திமுக வை நம்பமாட்டார்கள். மாற்று கட்சியான பாஜக வை மக்கள் ஏற்க்கும் நிலை வரலாம் கட்டாயம் வரலாம். அப்படி ஒரு நிலை கட்டாயமாக வரக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X