பொது செய்தி

தமிழ்நாடு

'டெபிட் கார்டில்' மின் கட்டணம் மாநிலம் முழுதும் செலுத்தலாம்?

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : சென்னை மின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட் கார்டில்' மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தியதை அடுத்து, அத்திட்டத்தை மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.மின் கட்டண மையங்களில், டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் வசதி, சென்னையில் 2017 அக்டோபரில் துவங்கியது. இதற்காக 325


சென்னை : சென்னை மின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட் கார்டில்' மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தியதை அடுத்து, அத்திட்டத்தை மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.



latest tamil news




மின் கட்டண மையங்களில், டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் வசதி, சென்னையில் 2017 அக்டோபரில் துவங்கியது. இதற்காக 325 மையங்களுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட்டன.அந்த கருவிகளுக்கு மாற்றாக, தற்போது கூடுதல் வசதிகளுடன் கூடிய கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அத்திட்டத்தை மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:திட்டம் துவக்கிய போது வழங்கப்பட்ட கருவியில், ஊழியர்கள் கட்டணத்தை, 'டைப்' செய்ய வேண்டும். பின், ரகசிய குறியீட்டு எண்ணை வாடிக்கையாளர் டைப் செய்ததும் கட்டணம் ஏற்கப்படும்.இந்த கருவிகள், இரு தனியார் வங்கிகள் வாயிலாக வைக்கப்பட்டன. ஊழியர்களே தொகையை டைப் செய்வதால் தவறுகள் ஏற்பட்டன.


latest tamil news



இதனால், சென்னை மையங்களில் பழைய கருவிகளுக்கு மாற்றாக, புதிய கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கணினியில் மின் இணைப்பு எண்ணை பதிவிட்டதும், கட்டணம் தானாகவே கருவியில் தெரியும். பின், ரகசிய எண்ணை டைப் செய்து செலுத்தலாம். இதையடுத்து, டெபிட் கார்டு வாயிலாக கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை, மாநிலம் முழுதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
enkeyem - sathy,இந்தியா
28-செப்-202115:42:11 IST Report Abuse
enkeyem இந்தியாவின் அரசுத்துறை வங்கியான SBI மின் கட்டணம், LPG refill booking போன்றவற்றிற்கு நெட் பேங்க் மூலம் பணம் செலுத்த கட்டணம் வசூலிக்கிறது. எச் டி எப் சி போன்ற தனியார் வங்கிகளில் கட்டணம் இல்லை. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்
Rate this:
Cancel
28-செப்-202110:37:34 IST Report Abuse
முரளி ஃபோன் பே app எல்லோருக்கும் தெரிந்து இருக்க லாம் இதன் மூலம் பண பரிமாற்றம் ஃபோன் மற்றும் மின்சாரம் பில் சிலிண்டர் book செய்வது எல்லாம் மிகவும். சுலப மா க செய்யலாம் ஆன்லைன் payment செய்ய லாம்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
28-செப்-202108:08:09 IST Report Abuse
Loganathan Kuttuva மின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் இணைய தளங்களின் வாயிலாக மின் கட்டணம் செலுத்துகிறார்கள் .சில்லறை தட்டுப்பாடு பிரர்ச்சனை ஏற்படுவதில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X