பொது செய்தி

தமிழ்நாடு

உச்சவரம்பை தாண்டி நகை கடன் கிரிமினல் நடவடிக்கை பாயும்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : தனி நபருக்கு நகை கடன் உச்சவரம்பான, 20 லட்சம் ரூபாயை தாண்டி கடன் கொடுத்த மேலாளர்கள், செயலர்கள் மீது, கிரிமினல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தனிநபர்களுக்கு

சென்னை : தனி நபருக்கு நகை கடன் உச்சவரம்பான, 20 லட்சம் ரூபாயை தாண்டி கடன் கொடுத்த மேலாளர்கள், செயலர்கள் மீது, கிரிமினல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.



latest tamil news




கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தனிநபர்களுக்கு வழங்கப்படும் தங்க நகை கடன் உச்சவரம்பானது, 20 லட்சம் ரூபாய் என்றளவில் உள்ளது. அதற்கு மேல் கடன் தரக்கூடாது. கூட்டுறவு சங்க தலைவர்களாக உள்ள கட்சியினர், சங்க செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து, தனிநபர் உச்சவரம்பை தாண்டி கடன் கொடுப்பது, போலி நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து, 'ஆதார்' எண் பெறப்பட்டு, சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளதால், அனைத்து நகைக் கடன் தொடர்பாக, தனி குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், 282 கூட்டுறவு நிறுவனங்களில், உச்சவரம்பை தாண்டி பலருக்கு கடன் கொடுக்கப்பட்டு இருப்பதை, கூட்டுறவு துறை கண்டறிந்துள்ளது. அதற்கு காரணமான செயலர்கள், மேலாளர்கள், ஊழியர்கள், சங்க நிர்வாக உறுப்பினர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு, வங்கி மேலாண் இயக்குனர்களை கூட்டுறவுதுறை அறிவுறுத்தி உள்ளது.


latest tamil news




இது குறித்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கூறியதாவது:போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம். சிலர் உச்சவரம்பை தாண்டி கடன் கொடுத்திருந்தாலும், அதற்கு இணையான தங்கத்தை பெற்று தான் கடன் தந்துள்ளனர்.இதற்கு, கூட்டுறவு சங்க தலைவர்களின் துாண்டுதல், உயரதிகாரிகளின் நெருக்கடியே காரணம்.எனவே, உச்சவரம்பை தாண்டி கடன் கொடுத்த அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருப்பதை, உயரதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veerappan Elangovan - Erode,இந்தியா
28-செப்-202110:01:39 IST Report Abuse
Veerappan Elangovan 10 lakhs மற்றும் அதர்க்கும் மேல் நகை கடன் பெற்றவர்கள் லிஸ்ட் எடுத்து அவர்கள் எடுத்த நாளில் அந்த ஆதார் கார்டுக்குரியவர்கள் தான் கடன் பெற்றார்களா அல்லது யாரோ ஒருவரே தங்கள் வேலையாட்களின் பெயர்களில் நகையை வைத்து கடன் பெற்றுள்ளார்களா என்பதை அந்தந்த தேதி வாரியாக கூட்டுறவு வங்கியின் கேமராவை வைத்து செக் பண்ணவேண்டும் அப்போதுதான் இன்னும் நிறையபேர் சிக்குவார்கள். இதை மாநகராட்சி தலைமை வங்கியில் சோதனை செய்தல் நிறைய பேர் அகப்படுவார்கள் இதை ஆளும் கட்சி உடனே நடவடிக்கை எடுக்க இதன் மூலம் வேண்டிக்கொள்கிறேன்.
Rate this:
Cancel
28-செப்-202109:24:03 IST Report Abuse
சங்கிமக்கா யாருமேல... கை வெப்பீங்களா..?? நடந்தா சந்தோஷம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202108:17:27 IST Report Abuse
duruvasar இந்த அறிவிப்பு வழக்கம்போல் கண்துடைப்பாக இல்லாமல் கட்சி வேறுபாடின்றி எடுக்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றவர்கள் சாமான்யனாக இருக்க வாய்ப்பில்லை. வட்டம் ஒன்றிய அளவில் கட்சி பதவியிலிருப்பவர்களாகத்தான் இருக்க வாய்ப்புக்கள் அதிகம். இந்த அளவுக்கு வசதி பெற்றவர்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்திருக்கிறார்களா என்பதை வருமான வரித்துறை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X