பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,28: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (செப்.,28), பெட்ரோல் லிட்டருக்கு 99.15 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.17 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (செப்.,28), பெட்ரோல் லிட்டருக்கு 99.15 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.17 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.93 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ 99.15 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ 94.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
28-செப்-202113:00:35 IST Report Abuse
துயில் விரும்பி நான் வெளில போறதில்லை, எனக்கு கவலை இல்லை. போக போக நான் என்னுடைய தேவையையும் குடும்ப தேவைகளையும் குறைத்து வாழ பழகிக்கொள்வேன். பிச்சை எடுக்கவும் என் குடும்பம் தயாராக உள்ளது.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
28-செப்-202108:59:07 IST Report Abuse
பாமரன் கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பத்து சதவீதம் வரை இறங்கியும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் வரை அதிகரித்தும் அதன் பயனை முழுமையாக தராமல் எரிபொருள் விலையை அரை சதவீதம் வரை மட்டுமே இறக்கிட்டு இப்போ கச்சா எண்ணெய் லேசான விலையேற்றம் கண்டதும் மக்கள் தலையில் கட்டறாய்ங்க... இடையில் கிடைத்த கொள்ளை லாபம் யாருக்கு போச்சு...???
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-செப்-202107:58:24 IST Report Abuse
RajanRajan மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையில் வரி விதிக்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். இது சார்ந்த நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வை பற்றி மத்திய மாநில அரசுகள் கவலை பட்டதாகவே தெரிய வில்லை. முதலில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கும் எரிவாய்வு பெட்ரோல் டீசல் சலுகைகளை ரத்து செய்யுங்கள். இவிங்களுக்கு ஒட்டு போட்ட மக்களே இந்த பொருட்களை விலை கொடுத்து வாங்கும் போது இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X