கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டவர்களை கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப்பிரிவு: ஐகோர்ட்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : வெளிநாட்டவரின் நடமாட்டத்தை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்பிரிவு ஏற்படுத்த, டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை, சீனா, நைஜீரியா, ஈரான் மற்றும் வங்க தேசம் நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள், அனுமதிக்கப்பட்ட நாட்களையும் மீறி தங்கி இருப்பதாகவும், பலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும் போலீசுக்கு புகார்கள்

சென்னை : வெளிநாட்டவரின் நடமாட்டத்தை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்பிரிவு ஏற்படுத்த, டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


இலங்கை, சீனா, நைஜீரியா, ஈரான் மற்றும் வங்க தேசம் நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள், அனுமதிக்கப்பட்ட நாட்களையும் மீறி தங்கி இருப்பதாகவும், பலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும் போலீசுக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, கைது செய்யப்பட்ட சிலர் ஜாமின் கோரியும், சிலர் முன்ஜாமின் கோரியும், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தன. டி.ஜி.பி., சார்பில், அரசு வழக்கறிஞர் கோபிநாத், மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ஆர்த்தி ஆஜராகினர்.மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு: வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கும், செல்வதற்குமான நடைமுறையை, முறையாக பின்பற்றுவதில் தான், நாட்டின் பாதுகாப்பு உள்ளது.

குடியுரிமை துறை, வெளிநாட்டிருக்கான பதிவுத்துறை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும்.சுற்றுலா, வணிகம், வேலை என்ற போர்வையில், வெவ்வேறு நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள், அனுமதிக்கப்பட்ட நாட்களை மீறி தங்குகின்றனர்; பலர் குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். நாட்டின் பொருளாதாரம், அமைதியை உலுக்கும் விதத்தில் சிலரது செயல்கள் உள்ளன.விசா காலத்தை மீறி தங்கி இருப்பவர்கள், சட்டவிரோதமாக வந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு விரிவான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.



இருந்தும், விசா காலம் முடிந்து 13 ஆயிரத்து 289 பேர் தங்கி இருப்பதாக தெரிகிறது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை மாவட்டங்களில், இவர்கள் உள்ளனர்.போலி ஆவணங்கள் வாயிலாக, பலர் இந்திய அடையாள அட்டையையும் பெற்றுள்ளனர். மத்திய அரசு பிறப்பித்த வழிமுறைகளின் அடிப்படையில், உரிய அனுமதியின்றி தங்கி இருப்பவர்களை, அவர்கள் நாட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.ஆனால், இவர்களை அடையாளம் காண மாநில அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை. மத்திய உள்துறையின் வழிமுறைகளை பின்பற்றுவதில், மெத்தனம் காட்டப்படுகிறது.எனவே, மத்திய அரசின் வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற, சில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியதுள்ளது. அப்போது தான், சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அனுமதிக்கப்பட்ட நாட்களை மீறி தங்கும் பிரச்னைக்கு முடிவு ஏற்படும்.
.


latest tamil news



பிற நாட்டவர்கள் தமிழகத்துக்குள் வரும் போது, அவர்களின் பாஸ்போர்ட் விபரங்கள், எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விபரத்தை மாநில போலீசுக்கு, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்* சட்டவிரோதமாக வருபவர்களை அடையாளம் கண்டு விட்டால், அவர்களை உடனடியாக முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்; அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்* சிறைகளில் இருக்கும் வெளிநாட்டவர்களை கண்டறிந்து, தண்டனை காலம் முடிந்த உடன், அவர்கள் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டவர் நடமாட்டத்தை சம்பந்தப்பட்ட போலீசார் கண்காணிக்க வேண்டும்* வெளிநாட்டவர் நடமாட்டத்தை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்பிரிவை, டி.ஜி.பி., ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
28-செப்-202119:08:34 IST Report Abuse
mathimandhiri மேற்கு வஙகத்துக்கு மட்டும் சிறப்பு கவனம் தேவை//ஏனென்றால் நிலைமை எப்பொழுது வேண்டுமென்றாலும் கை மீறும் அபாயம் உள்ளது////
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
28-செப்-202119:06:46 IST Report Abuse
mathimandhiri நீதி மன்றம் சரியானபடி நிலைமையை ஆராய்ந்து ,,அக்கறையுடன் இந்த தீர்ப்பைக் கூறியுள்ளது///// அத்தீர்ப்பை அச்சுப் பிழறாமல் நிறைவேற்றினால் தான் விமோசனம்////
Rate this:
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
28-செப்-202117:25:56 IST Report Abuse
B. இராமச்சந்திரன் நம்ம ஆட்களுக்கு இந்திக்காரன் மட்டும்தான் வரக்கூடாது... மற்ற நாட்டுக்காரன் வந்தா பிரச்சனையில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X