தமிழ்நாடு

கூட்டுறவு நகைக்கடன் ஆய்வுக்கு... 15 குழுக்கள்! தேனி மாவட்டத்தில் இன்று பணி துவக்கம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் ஆய்வுக்கு 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இன்று(செப்.,28) முதல் ஆய்வு பணியை துவக்குகின்றனர்.கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் கூட்டுறவு நகைக்கடனில் முறைகேடு

தேனி : தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் ஆய்வுக்கு 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இன்று(செப்.,28) முதல் ஆய்வு பணியை துவக்குகின்றனர்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் கூட்டுறவு நகைக்கடனில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் கூட்டுறவு நகைக்கடன் குறித்து மதுரை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவில் சார் பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர் அல்லது கள மேலாளர், நகை மதிப்பீட்டாளர் என 3 பேர் இடம்பெறுவர். இக் குழுவினர் ஆய்வு பணி இன்று முதல் துவங்குகிறது.

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் என மொத்தம 108 கிளைகள் உள்ளன. இதில் 2021 மார்ச் 31ந் தேதி வரை 5 சவரனுக்கு உட்பட்டு 71,409 பெயர்களில் ரூ.291 கோடி வரை கடன் பெறப்பட்டுள்ளது. இந்த கடன் தொகைக்கு ஏற்ப நகைகள் இருப்பு உள்ளதா, போலி நகைகள் உள்ளதா என ஆய்வு நடக்கும்.

இதுதவிர 2021 ஏப்.,1 முதல் நிலுவை கடன்கள் குறித்தும் 100 சதவீதம் ஆய்வு நடத்த உள்ளனர். இப்பணியை நவ.,15க்குள் முடித்து சரக துணைப்பதிவாளர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்வர். அவர் நவ.,20ம் தேதிக்குள் மண்டல இணை பதிவாளர் மூலம் பதிவாளருக்கு அனுப்ப உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X