பொது செய்தி

தமிழ்நாடு

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் காளி சூலம் மாற்றப்பட்டுள்ளதா?

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், காளியம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு, காளியம்மன் கையில் உள்ள சூலம் மாற்றப்பட்டுள்ளதாக பணியாளர்கள் புலம்புகின்றனர்.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவின்கீழ் செயல்படும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், 2012ம் ஆண்டு கோவிலில் பணிபுரிபவர்கள் மற்றும் வெளி ஆட்கள் தொடர்புடன் காளியம்மன் கையில் உள்ள சூலத்தை
திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர், காளி, சூலம்,

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், காளியம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு, காளியம்மன் கையில் உள்ள சூலம் மாற்றப்பட்டுள்ளதாக பணியாளர்கள் புலம்புகின்றனர்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவின்கீழ் செயல்படும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், 2012ம் ஆண்டு கோவிலில் பணிபுரிபவர்கள் மற்றும் வெளி ஆட்கள் தொடர்புடன் காளியம்மன் கையில் உள்ள சூலத்தை இரவோடு இரவாக திருடிவிட்டு, அதே அளவுடைய வேறு சூலம் செய்து வைத்தனர். ஐம்பொன்னால் செய்யப்பட்ட, பழமையான சூலம் திருடப்பட்டு உள்ளது.


latest tamil news




இதில், கோவிலில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளது என தெரிந்தும், திருத்தணி கோவில் அதிகாரிகள், 10 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் யாரை பாதுகாக்கின்றனர் என்று தெரியவில்லை என, வடாரண்யேஸ்வரர் கோவிலில் பணிபுரிபவர்கள் புலம்புகின்றனர்.


latest tamil news




இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன், பக்தர் ஒருவரிடம் ஊழியர் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து, இத்தகவல் வெளியே தெரிய வந்தது.

இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், 'தற்போது உள்ள சூலத்தையும், முன்பிருந்த சூலத்தின் படத்தையும் வைத்து பார்த்தாலே தெரிந்துவிடும். பழைய சூலத்தின் நடுப்பகுதி வலது பக்கம் திரும்பி இருக்கும்' என்றார்.

இது குறித்து திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ரமணி கூறுகையில், ''உடனடியாக ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202118:30:50 IST Report Abuse
Magesh Magesh இது தேவையற்ற வீண் வதந்தி புராதான அழகிய சிலையை மாற்றி புதிய சிலை நல்ல நிலையில் வைக்கப்பட்டு இருக்கும் புராதான சிலை இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இருக்கும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-செப்-202113:21:42 IST Report Abuse
Ramesh Sargam கடவுளுக்கும் பயப்படாதவர்கள் இந்த - 'கழக கண்மணிகள்' இன்று சூலத்தை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். நாளை முழு சிலையும் மாற்றப்படும் அல்லது ஆட்டை போடப்படும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-செப்-202112:20:14 IST Report Abuse
தமிழவேல் திருத்தணி கோவிலில் டிக்கெட் விவகாரத்தில் என்னையே ஏமாற்றப் பார்த்தான்கள். அதில் (3 இல்) ஒரு காக்கிசட்டைக் காவலனும் இருந்தான். திருட்டுக்கு கும்பல் // திருத்தணி கோவில் அதிகாரிகள், 10 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. //
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X