பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்தோருக்கு வீட்டு 'தனிமை' இல்லை

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னையில், கொரோனா தொற்று ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தில், மூன்று முதல் ஐந்து பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதனால், வீட்டு தனிமைக்கு பதிலாக, அனைவரையும் 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகராட்சியில், 5 லட்சத்து, 49 ஆயிரத்து, 270 பேர்
கொரோனா, வீட்டுதனிமை, இல்லை, மருத்துவமனை, சிகிச்சை, கட்டாயம், குடும்ப தொற்று,நடவடிக்கை, ரத்து

சென்னையில், கொரோனா தொற்று ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தில், மூன்று முதல் ஐந்து பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதனால், வீட்டு தனிமைக்கு பதிலாக, அனைவரையும் 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில், 5 லட்சத்து, 49 ஆயிரத்து, 270 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 8,467 பேர் இறந்துள்ளனர். இதில், 5 லட்சத்து, 38 ஆயிரத்து, 745 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,058 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.தற்போது, சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.

குறிப்பாக, அண்ணா நகர்,தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் கணிசமானஅளவில் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சி தினசரிபாதிப்பு, 180 முதல் 220 ஆக பதிவாகி வருகிறது. மாநகரில், பரவலாக தொற்று இல்லாத நிலையில், மார்க்கெட், நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு நோய் தொற்றுஏற்படுகிறது. அவர்கள் வீட்டு தனிமையில் இருக்கும் போது, குடும்பத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களும், தொற்று ஏற்படுகிறது. அதனால், ஒரே குடும்பத்தில், பலரும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.


latest tamil news
தற்போது, ஒரு தெருவில், மூன்று பேருக்கு மேல் பாதிக்கப்பட்டால், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி, 110 தெருக்கள், மருத்துவ கண்காணிப்பு பகுதிக்குள் உள்ளன.

இதற்கிடையே, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மண்டல வாரியாக, வாரத்தில் இரண்டு நாட்கள் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், சென்னையில் குடும்ப தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, வீட்டு தனிமையில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என, சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news
இது குறித்து, சென்னை மாநகராட்சி சுகாதார நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன் கூறியதாவது: சென்னையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வாரந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி, தடுப்பு நடவடிக்கைள் குறித்து, அந்தந்த மண்டல சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருக்கும் பலர், வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் வெளியே சுற்றுகின்றனர். அவர்கள் வாயிலாக குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் தொற்று பரவுகிறது. இதை தடுக்க, 'வீட்டு தனிமை கூடாது;மருத்துவமனையில்தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளோம்.

கொரோனா இரண்டாம் அலைக்கு ஏற்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்பு, அப்படியே தான் உள்ளது. அதில், தொற்றால் பாதிக்கப்படுவோரை அனுமதித்து, சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளோம். கட்டாயம் வீட்டு தனிமை வேண்டுவோரின் வீடுகளை, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வர். நோய் தொற்று ஏற்பட்டவர்கள் வீட்டில் தனி அறை, கழிப்பறை போன்ற கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிப்பர். அவர்களும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால், வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு, கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இந்த விஷயத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்க வேண்டாம் என, கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


வயது வாரியாக கொரோனா தொற்றுவயது / சதவீதம்


0 - 9 / 2.59

10 - 19 / 8.82

20 - 29 / 15.21

30 - 39 / 19.49

40 - 49 / 14.95

50 - 59 / 15.48

60 - 69 / 11.78

70 - 79 / 8.56

80 வயதுக்கு மேல் / 3.12


நேற்றைய பாதிப்பு!சென்னையில், ஒரு மாதமாக கொரோனா தொற்று ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதன்படி, நேற்று, 186 பேர் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். புறநகர் மாவட்டங்களான, செங்கல்பட்டில், 113 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவள்ளூரில், 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில், 37 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
28-செப்-202115:18:36 IST Report Abuse
Vena Suna ஆக கொரோனா அதிகம் ஆகி கொண்டு வருகின்றது. அருமை . நன்றாக இருக்கிறது .
Rate this:
sivan - seyyur,இந்தியா
28-செப்-202118:33:34 IST Report Abuse
sivan ஏன் ??? இப்படி ஒரு நல்ல எண்ணம்?...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-செப்-202115:11:54 IST Report Abuse
அசோக்ராஜ் ஆஸ்பிட்டல்கள் வெயிட்டா கவனிச்சுட்டாங்க போலே. அப்பல்லோவே ஆனாலும் இலவச "தனிமைப் படுத்துதல்"தான்-னு சொல்லுங்கடா பார்ப்போம். அஞ்சு நாளைக்கு குந்தி இருக்க ரெண்டு லஞ்சம் ரூவா கொள்ளையாம். எத்தனை அப்பாவிகள் சிக்கப் போறாங்களோ? பேடி நல்லா வருவாரு.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202109:04:17 IST Report Abuse
Lion Drsekar கொள்ளையர்களின் கைகளில் அகப்படாமல் அரசே இலவசமாக மருத்துவம் பார்த்தல் உலகம் பாராட்டும், வாழ்க உங்களின் கொற்றம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X