இறை பணி போலவே, ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதிலும் உங்கள் கட்சிக்கு இணை உங்கள் கட்சி தான்!

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி: இறை பணியில் தி.மு.க.,வுக்கு இணையானவர்கள் யாரும் கிடையாது. தி.மு.க., அரசு அமைந்த பிறகு தான், பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இறை பணி போலவே, ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதிலும் உங்கள் கட்சிக்கு இணை உங்கள் கட்சி தான்!காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை: பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள்
இறை பணி போலவே, ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதிலும் உங்கள் கட்சிக்கு இணை உங்கள் கட்சி தான்!

தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி: இறை பணியில் தி.மு.க.,வுக்கு இணையானவர்கள் யாரும் கிடையாது. தி.மு.க., அரசு அமைந்த பிறகு தான், பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.


இறை பணி போலவே, ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதிலும் உங்கள் கட்சிக்கு இணை உங்கள் கட்சி தான்!



காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை: பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய போது, ஓரிருவர் தான் சபையில் இருந்தனர்; யாரும் கை தட்டி ஆரவாரிக்கவில்லை.


இதில் உங்களுக்கு மகிழ்ச்சியா... நீங்கள் சொல்வதுபடி நடந்திருந்தால், நம் நாட்டுக்குத் தானே அவப்பெயர்!



புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: முன்னேறிய ஜாதிகளை, இட ஒதுக்கீடு பெறும் ஜாதிகளாக ஆக்கி, திராவிடத்தால் தான் அந்த ஜாதிகள் முன்னேற்றியது போல 'ஸ்டிக்கர்' ஒட்டிக்கொள்வது தான் திராவிட சமூக நீதியின் பித்தலாட்டம்.


திராவிட பித்தலாட்டங்களை புட்டு புட்டு வைக்கிறீர்களே; பாராட்டுகள்!




கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு: 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர். இவர்களை உடனடியாக நாம் மீட்டெடுக்க வேண்டும். இதற்காக காவல் துறையில் 'டிஜிட்டல்' போதை மீட்பு மையங்கள் திறக்கப்படுகின்றன.


latest tamil news





மாணவர்கள் மீது தான் என்னவொரு அக்கறை... மது போதை மீட்பு மையங்கள் பாணியில் டிஜிட்டல் போதை மீட்பு மையங்கள்.



விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: வறட்டு கவுரவ கொலைகளை தடுப்பதற்கு சமூகம், கலாசாரம் மற்றும் அரசியல் தளங்களில் தொலைநோக்கு பார்வையுடன் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.


'உண்மை தான். கவுரவ கொலைகள் எனப்படும் ஆணவ கொலைகள், சமூகத்தின் கேடு என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது!



மார்க்சிஸ்ட் செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரியின் தாய், 89 வயதில் நான்கு நாட்களுக்கு முன் இறந்தார். சில மாதங்களுக்கு முன் தான் தன் மகனை யெச்சூரி இழந்தார். இந்த சோதனையிலும், அவரின் தாயின் உடல், மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டுள்ளது.


கம்யூ.,க்களுக்கு இளகிய மனம் உள்ளது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
28-செப்-202119:01:26 IST Report Abuse
sankaseshan ஆலய ப்ரெவசத்துக்கு மூல காரணம் மதுரை வைத்தியநாத அய்யரும் , பசும்பொன் தேவர் அய்யவும்தான் திமுக ஒருதுரும்பை கூட கிள்ளிப் போட வில்லை
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-செப்-202117:17:37 IST Report Abuse
sankaseshan சிதம்பரம் செட்டியாருக்கு பொறாமையும் குசும்பும் ஜாஸ்தி. மோடிஜிக்கு உலகம் பூராவும் மதிப்பு. ஆகவே பொய்யாக செய்தி பரப்புகிறான். அமெரிக்கன் செனட் அவருக்கு 8 முறை எழுந்து நின்று கரகோஷம் செய்தன
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-செப்-202116:37:38 IST Report Abuse
DVRR "இறை பணி போலவே, ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதிலும் உங்கள் கட்சிக்கு இணை உங்கள் கட்சி தான்" மிக மிகச்சரியான பதில்
Rate this:
RAVIKUMAR - chennai,இந்தியா
28-செப்-202117:29:30 IST Report Abuse
RAVIKUMARஹிந்து மதத்தை யாரு ரொம்ப அநாகரீகமா இழிவு படுத்தினதுனு எல்லாருக்குமே தெரியும் ...இன்னும் எத்தனை வரப்போகுதோ ?.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X