பொது செய்தி

தமிழ்நாடு

கிளம்பு... காத்து வரட்டும்: ஊழலில் ஊறிய அதிகாரிகளுக்கு வருகிறது 'டிரான்ஸ்பர்' உத்தரவு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
கோவை: கோவை மாநகராட்சியில், டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால், மற்ற அதிகாரிகள் பீதியில் உறைந்திருக்கின்றனர்.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே, கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் உடனடியாக
ஊழல், அதிகாரிகள், டிரான்ஸ்பர், உத்தரவு

கோவை: கோவை மாநகராட்சியில், டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால், மற்ற அதிகாரிகள் பீதியில் உறைந்திருக்கின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே, கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் உடனடியாக மாற்றப்பட்டனர். கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததும், நகர் நல அலுவலர் மாற்றப்பட்டார்.

இதேபோல், அனைத்து பிரிவு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்படுவது உறுதி என்கிற கருத்து உலவியது. ஆனால், சுகாதார ஆய்வாளர்கள் மட்டும், மாநகராட்சி எல்லைக்குள் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றப்பட்டனர். உதவி கமிஷனர் அந்தஸ்தில் இருப்பவர்கள், கிரேடு-1 ஆபீசர்கள் என்பதால், தமிழக அரசே உத்தரவிட வேண்டும். இருப்பினும், அவர்களுக்கு, வெவ்வேறு மண்டலங்களுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டது.

அடுத்த கட்டமாக, உதவி/ இளம் பொறியாளர்களை மாற்றுவதற்கும், அ.தி.மு.க., ஆட்சியில் இரவோடு இரவாக நியமித்த இளநிலை உதவியாளர்கள் பட்டியல் கோப்பும், துாசி தட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், துணை கமிஷனராக இருந்த விமல்ராஜ், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது, மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.


latest tamil news




இதைத்தொடர்ந்து, டெண்டர் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு அதிகாரிகள், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். மூன்று அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தகைய அதிரடி நடவடிக்கை, பொறியியல் பிரிவினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், பொறியியல் பிரிவில் ஒரு வேலை செய்வதாக இருப்பின், 'எம்' புக் (அளவீட்டு புத்தகம்) தயாரிப்பர். அது, குறிப்பிட்ட வேலையின் ஜாதகத்தை சொல்லும்.உதவி பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர், நகர பொறியாளர் என, பொறியியல் பிரிவை சேர்ந்த அனைத்து அலுவலர்களின் கையெழுத்தும் அதிலிருக்கும். அதனால், அப்பிரிவை சேர்ந்த அனைத்து அலுவலர்களும், இட மாறுதலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதேபோல், மண்டல உதவி கமிஷனர்களாக இருந்தவர்களில் சிலர், அ.தி.மு.க., ஆட்சியில், அக்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அவர்களும், தங்களுக்கு மாறுதல் உத்தரவு வருமோ என்கிற பீதியில் இருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
28-செப்-202116:56:59 IST Report Abuse
Suri இந்த ஊழல் அதிகாரிகள் மறைமுகமாக பி ஜெ பி க்கு வேண்டியவர்கள். இந்த அதிகாரிகள் வேலுமணியின் கையாள்களாக வேலை செய்தவர்கள். வேலுமணி பி ஜி பி க்கு என்ன மாதிரி உதவி செய்தார் என்று வானதி ஸ்ரீனிவாசனை கேளுங்கள்.
Rate this:
Cancel
soundararajan Ramaswamy - Chennai,இந்தியா
28-செப்-202115:28:57 IST Report Abuse
soundararajan Ramaswamy இப்ப இருக்கிற ஆட்சியாளர்களுக்கு கப்பம் கட்டவில்லை என்பதால் இந்த நடவடிக்கை . வேற ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. இனிமே என்னோமோ ராமராஜ்ஜயம் நடக்க போற மாதிரி உங்களோட நியூஸ் ஹெட் லைன்ல கிளம்பு காத்து வரட்டும். எல்லாம் ஒரே குட்டைல ஊ ரின மட்டைங்கதான்.. இவங்க கொள்ளை அடிப்பதற்கு தோதா ஆள் போட்டுப்பாங்க.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்கப்பம் கட்டிதானே காலந்தள்ளியது முந்தைய ஆட்சி? இன்று எல்லா மாவட்டக் கலெக்டர்களுமே நேரடி IAS போன ஆட்சியில் எல்லாம் ப்ரோமோட்டீ...
Rate this:
Cancel
guru - thiruvallore,ஆஸ்திரேலியா
28-செப்-202115:03:01 IST Report Abuse
guru வெறும் transfer மட்டும்தான, நாகூட என்னமோ ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா இருக்குமோன்னு நெனச்சே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X