பொது செய்தி

தமிழ்நாடு

கனவான டி.இ.டி., தேர்ச்சி; கை கொடுக்குமா டி.ஆர்.பி.,: வயது தளர்வு எதிர்பார்க்கும் 'கனவு ஆசிரியர்கள்'

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை: 'தமிழகத்தில் 2013, 2017ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் 'ஆசிரியர் கனவு' நிறைவேறாத நிலையில் தற்போது டி.ஆர்.பி., தேர்வும் வயது வரம்பு உத்தரவால் கைவிட்டு போகிறது' என 40 வயதை கடந்த ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர்.அரசு மேல்நிலை பள்ளிகளில் பாடங்கள் வாரியாக காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்
டிஇடி, தேர்ச்சி, டிஆர்பி, வயது தளர்வு, கனவுஆசிரியர்கள்

மதுரை: 'தமிழகத்தில் 2013, 2017ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் 'ஆசிரியர் கனவு' நிறைவேறாத நிலையில் தற்போது டி.ஆர்.பி., தேர்வும் வயது வரம்பு உத்தரவால் கைவிட்டு போகிறது' என 40 வயதை கடந்த ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர்.

அரசு மேல்நிலை பள்ளிகளில் பாடங்கள் வாரியாக காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி நவ., 13, 14, 15ல் நடக்கவுள்ள தேர்வுக்கு ஆன்லைன் மூலம் அக்.,17 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அறிவிக்கப்பட்ட இத்தேர்வை எதிர்நோக்கி காத்திருந்த 40 வயதை கடந்தவர்களுக்கு 'கல்வித்துறையில் ஆசிரியர் பணிக்கு சேர உச்சவரம்பு வயது 40 என்ற அ.தி.மு.க., ஆட்சியில் பிறப்பித்த உத்தரவு' பேரிடியாக அமைந்தது.

இவ்வயது பிரிவினர் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி டி.ஆர்.பி., தேர்வுக்காக தயாராகி வந்தனர். கொரோனா பேரிடரால் வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்கனவே மனஉளைச்சலில் தவித்த இவர்கள் அரசின் வயது வரம்பு உத்தரவும் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது.


latest tamil news



பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:பி.ஜி., மற்றும் பி.எட்., முடித்தவர் ஆசிரியராக வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. 40 வயதை கடந்த 90 சதவீதம் பேர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கும் மேல் தனியார் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றும் அனுபவம் உள்ளது. பல பொதுத் தேர்வுகளில் நல்ல தேர்ச்சியை தந்துள்ளோம். 2013, 2017 டி.இ.டி., தேர்வுகளிலும் பலர் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்கவில்லை. மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வை (சி.டி.இ.டி.,) 55 வது வயது வரை எழுதலாம் என்ற நிலையில் மாநில அரசின் டி.ஆர்.பி.,க்கு மட்டும் வயது உச்சவரம்பு ஏன். வயது வரம்பை 50 ஆக உயர்த்தினால் அனுபவம், திறமை உள்ள நுாற்றுக்கணக்கான ஆசிரியர் அரசு பள்ளிக்கு கிடைப்பார்கள்.முதல்வர் ஸ்டாலின் மனது வைத்து வயது வரம்புக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliraj N -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202116:31:03 IST Report Abuse
Kaliraj N சீனியாரிட்டி மூலம் கலைஞர் ஏராளமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டர், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களில் சொற்ப எண்ணிக்கையிலானோரை பணியமர்த்ததாமல் அப்போதைய தேர்தல் கெடுத்துவிட்டது...பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா வால் பலரின் வாழ்கை கேள்விக்குறியாகி விட்டது...ஆனால் அதற்கான தண்டனையை பெற்றுவிட்டார்....
Rate this:
Cancel
Kaliraj N -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202116:31:03 IST Report Abuse
Kaliraj N சீனியாரிட்டி மூலம் கலைஞர் ஏராளமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டர், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களில் சொற்ப எண்ணிக்கையிலானோரை பணியமர்த்ததாமல் அப்போதைய தேர்தல் கெடுத்துவிட்டது...பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா வால் பலரின் வாழ்கை கேள்விக்குறியாகி விட்டது...ஆனால் அதற்கான தண்டனையை பெற்றுவிட்டார்....
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
28-செப்-202115:13:29 IST Report Abuse
M S RAGHUNATHAN இந்த தேர்தலில் தெரியாமல் தோல்வி அடைந்து யாராவது தற்கொலை செய்து கொண்டால் அரசு பொறுப்பு ஏற்று இந்த மாதிரி தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த தேர்வில் தேறும் அனைவருக்கும் பணி நியமன ஆணை அரசு அளிக்குமா? அல்லது ஏதாவது Cut off மதிப்பெண் வைப்பார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X