பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு எல்லையில் குழப்பம்! தேர்தல் பாதுகாப்பில் போலீசுக்கு சிக்கல்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டாலும், போலீஸ் எல்லை முறையாக பிரிக்கப்படாததால், போலீசார் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் சமயத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசாணைகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 2019ல் செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டும், இரு மாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் துறை எல்லைகள்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், எல்லை, போலீஸ், பாதுகாப்பு, பிரச்னை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டாலும், போலீஸ் எல்லை முறையாக பிரிக்கப்படாததால், போலீசார் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் சமயத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


அரசாணை


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 2019ல் செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டும், இரு மாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் துறை எல்லைகள் வரைமுறைப் படுத்தப்படாமல் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் இருந்தன. தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 5ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எல்லைகளைப் பிரித்து அரசாணை பிறப்பித்தது. அதன்படி சாலவாக்கம், உத்திரமேரூர், பெருநகர் ஆகிய காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இதில் சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்கள், காஞ்சிபுரத்தில் வருமா, செங்கல்பட்டில் வருமா என குழப்பம் ஏற்பட்டது.

காரணம், காஞ்சிபுரம் போலீஸ் எல்லையாகவும், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கிராம எல்லையாகவும் செயல்பட்டு வந்தது. இதையடுத்து சாலவாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களைக் கணக்கிட்டு, மெய்யூர், சம்பாதிநல்லுார், அத்தியூர், பிலாப்பூர், சித்தண்டிமண்டபம், பள்ளியகரம், மங்கலம், நெல்வாய், குமாரவாடி, கருணாகரச்சேரி, சாலவாக்கம் கூட்டுசாலை, புக்கத்துறை, நடராஜபுரம், கொடிதண்டலம் ஆகிய கிராமங்கள் படாளம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டன.

அதேபோல் பாலுார் காவல் நிலையத்தில் இருந்த பழையசீவரம், சங்கராபுரம், வரதாபுரம், லிங்காபுரம், தொள்ளாழி, தொண்டான்குளம், உள்ளாவூர், கொசப்பேட்டை ஆகிய கிராமங்கள் சாலவாக்கம் காவல் எல்லையில் இணைக்கப்பட்டன. இதன் வாயிலாக, சாலவாக்கம் காவல் எல்லை பிரச்னை முடிவுக்கு வந்தது.


latest tamil news




சுணக்கம்


ஆனால், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லையில் இருந்த கிராமங்களில் எல்லை பிரிப்பு சரியாக நடைபெறாததால் 10 கிராமங்கள் இதில் விடுபட்டு உள்ளன. உத்திரமேரூர் காவல் எல்லையாக தற்போதுள்ள 10 கிராமங்கள், செங்கல்பட்டு வருவாய் கிராமங்களில் இணைந்துள்ளன. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமயத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய சூழல் வரும்.

இரு மாவட்ட எல்லையில் குழப்பத்தில் உள்ள 10 கிராமங்களில் 21 ஓட்டுச்சாவடிகள் வருகின்றன. இந்த ஓட்டுச்சாவடிகளுக்கு 40 போலீசார் வரை பாதுகாப்பு பணிக்கு அனுப்ப வேண்டி வரும்.தேர்தல் பணி மட்டுமல்லாமல், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலும், குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமானாலும், இப்போலீசார் செங்கல்பட்டு கலெக்டரை அணுக வேண்டிய சூழல் வரும். இதனால் இப்பகுதிகளில் மட்டும் தேர்தல் பணிகள் சுணக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.


அரசுக்கு அறிக்கை


போலீஸ் எல்லை பிரிப்பு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டுள்ளேன். இது சம்பந்தமாக, மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் அரசுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்கிறேன். அப்பகுதியில் உள்ள கிராமங்களில் கூடுதல் காவல் நிலையம் ஒன்று தேவைப்படுவதாக அப்பகுதி எம்.எல்.ஏ., ஏற்கனவே மனு கொடுத்துள்ளார். அது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.
- சத்யபிரியா, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,


latest tamil news



தகராறு நடக்க வாய்ப்பு


எல்லை குழப்பத்தில் உள்ள 10 கிராமங்களில், தேர்தல் நாளன்று ஏற்படும் கூட்டம், தகராறு உள்ளிட்டவை நிச்சயம் நடக்கும். இதை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் தேவைப்படும். போலீசார் பற்றாக்குறை இருப்பதால், தற்போது தேர்தல் கண்காணிப்பு பணியையும் முறையாக பார்க்க முடியவில்லை. மன அழுத்தமாக இருக்கிறது.
- பெயர் வெளியிடாத போலீசார்


10 கிராமங்கள் எவை?


1.எல்-.எண்டத்துார்
2. வடக்கரணை
3.ஆலப்பாக்கம்
4. திட்டாளம்
5.கோழியாளம்
6.பன்பனைப்பட்டு
7.பாப்பநல்லுார்
8.வைப்பணை
9.கடம்பூர்
10. நெல்லி

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
28-செப்-202116:53:08 IST Report Abuse
DVRR சீன இந்திய எல்லை???பாகிஸ்தான் இந்திய எல்லை???தமிழ்நாடு கேரளா எல்லை???இந்த சண்டை எல்லாம் ஒஞ்சி போய் இப்போ காஞ்சிபுரம் செங்கல்பட்டு எல்லை வரை வந்து விட்டதா?????
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-செப்-202112:25:59 IST Report Abuse
Ramesh Sargam எந்த மாநிலத்தில் இணைக்கப்பட்டாலும் இந்த போலீசார் என்ன 'மக்களின் நண்பனாகவா' செயல்பட போகிறார்கள். இங்கு என்ன செய்தார்களோ, அங்கும் அதையேதான் செய்வார்கள் - லஞ்சம் வாங்குவதிலிருந்து.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
28-செப்-202111:59:29 IST Report Abuse
Visu Iyer அப்போ இருந்த அதிமுக அரசின் நிருவாக சீர்கேட்டில் இது ஒரு அம்சம்.. "கடுமையான ஊழல் குற்றவாளி" என்று உச்ச நீதிமன்றம் அடையாளம் காட்டிய ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை அடியோடு ஒழிக்க மக்கள் முன் வர வேண்டும்.
Rate this:
M L SRINIVASAN - CHENNAI,இந்தியா
28-செப்-202112:29:32 IST Report Abuse
M L SRINIVASANஅப்படியே செஞ்சிடுவோம் . உங்க உண்மையான பெயர் என்ன ? அந்தோணி யா அஸ்லம் மா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X