பொது செய்தி

தமிழ்நாடு

எழும்பூரில் காவலர் அருங்காட்சியகம்: மக்கள் பார்வைக்கு முதல்வர் திறப்பு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இரண்டாவதாக சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.,28) திறந்து வைத்து பார்வையிட்டார்.சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு
சென்னை எழும்பூர், காவலா் அருங்காட்சியகம், மக்கள் பார்வை, முதல்வர் ஸ்டாலின் திறப்பு,

சென்னை: தமிழகத்தில் இரண்டாவதாக சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.,28) திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.7 கோடியில் சுமாா் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.


latest tamil news


ஏற்கனவே கோவையில் காவலர்கள் அருங்காட்சியகம் உள்ள நிலையில், தமிழகத்தில் இரண்டாவதாக அமைக்கப்பட்டிருக்கும் சென்னை எழும்பூரில் காவலர் அருங்காட்சியகத்தில் காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடா்பான அந்த காலத்தில் இயற்றப்பட்ட அதி முக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயர் காலத்தில் காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல்துறையின் தொடக்க கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப்படைகளின் புகைப்படங்கள், வரலாற்று சிறப்பு மிக்க செய்தி தொகுப்புகள், வயா்லெஸ் கருவிகள், காவல்துறை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக தமிழகம் சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் வரலாற்றில் சந்தித்த மிக முக்கியத் தருணங்களையும், அதில் காவல்துறைக்கு இருந்த பங்களிப்பையும் காலவரிசைப்படி அன்றைய காலத்தில் எடுக்கப்பட்ட அரிய போட்டோக்கள், அது குறித்த வரலாற்று குறிப்புகளுடன் காவல்துறை அருங்காட்சியகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news



இந்த அருங்காட்சிகம் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா, இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அருங்காட்சியகத்தை மக்கள் பாா்வையிடும் வகையில் திறந்து வைத்து அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அப்போது, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் ஸ்டாலின் பார்த்தார்.
முன்னதாக அருங்காட்சியகத்தைக் திறந்து வைக்க வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
28-செப்-202117:05:43 IST Report Abuse
DVRR 1) இது ஸ்டாலின் அரசில் ஆரம்பித்ததா???இல்லவே இல்லை. அதிமுக ஆட்சியில் சரிசெய்யப்பட்ட இந்த அருங்காட்சியகம் திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. எப்படி இந்த அரசின் சாதனை ஆகும்?? 2) இதை திறந்ததினால் 8.2 கோடி மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன அவர்கள் வாழ்வில்??? 3) எந்த நேரத்தில் எந்த விஷயம் செய்வது என்று ஒரு இங்கிதம் தெரியாமல் அதை செய்தோம் இதை செய்தோம் என்று டப்பா அடிப்பதற்காக செய்வது மிக தெளிவாகத்தெரிகிறது. 4) இப்போது அரசு ரூ 5.73 லட்சம் கோடி கடன் அதிமுக ஆட்சியிலிருந்து மாற்றப்பட்ட்து இந்த திமுக ஆட்சிக்கு + திமுக வாங்கிய ரூ 75,0000 கோடி கடன் இந்த 130 நாட்களில் இதையெல்லாம் எப்போது அடைக்க எப்படி அடைக்க அதன் வழிமுறைகள் என்ன அதற்க்காக எடுத்துக்கொண்ட நடவடிக்கை என்ன என்று இல்லாத ஒரு அரசு இந்த அரசு.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-செப்-202114:59:49 IST Report Abuse
அசோக்ராஜ் //"அன்றைய காலத்தில் எடுக்கப்பட்ட அரிய போட்டோக்கள், அது குறித்த வரலாற்று குறிப்புகளுடன்"// "ஐயோ கொல்றாங்க" காட்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதே போல் மிசா காலத்திய படங்களையும் வரவேற்கிறேன்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-செப்-202114:57:12 IST Report Abuse
அசோக்ராஜ் கோவிலுக்குப் போனா ஒட்டிக்கற கொரோனா செத்த காலேஜ் போனா ஒட்டிக்காதாம். அல்லாரும் ஜோரா கை தட்டுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X