பிரிட்டனில் லாரி ஓட்டுநர்கள் தட்டுப்பாடு: 90% பெட்ரோல் பங்குகள் காலி

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிய நிலையில் அங்கு, லாரி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து பொருட்களின் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டு, பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.உணவுப்பொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க, 'பொதுமக்கள் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம்' என, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிய நிலையில் அங்கு, லாரி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து பொருட்களின் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டு, பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.



latest tamil news




உணவுப்பொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க, 'பொதுமக்கள் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம்' என, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனாலும், முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளை நேற்று முன்தினம் முற்றுகையிட்ட பொதுமக்கள், தங்கள் வாகனங்களில் எரிபொருளை நிரப்பினர். இதனால், 90 சதவீத பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தீர்ந்தன.


latest tamil news





5,000 ஓட்டுநர்களுக்கு விசா



இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, வெளிநாட்டு லாரி ஓட்டுநர்கள் 5,000 பேருக்கு தற்காலிக விசா வழங்கும் திட்டத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. மேலும், எரிபொருள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் இணைந்து செயல்பட அனுமதி அளித்துள்ளது. தற்போதைக்கு எரிபொருள் லாரிகளை ஓட்டவும், பங்குகளில் மொத்தமாக பெட்ரோல் வாங்குவதை தடுக்கவும் ராணுவத்தினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
'அரசின் இந்த திட்டம் குறுகிய காலத்துக்கு மட்டுமே பயனளிக்கும். தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது' என, வர்த்தகத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-செப்-202117:09:57 IST Report Abuse
அசோக்ராஜ் லிக்கர் பாலுகளுக்கும் கிளீனர் வேலுகளுக்கும் பிரிட்டன் விசா ரெடி.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28-செப்-202112:59:03 IST Report Abuse
A.George Alphonse இதெல்லாம் பார்க்கும்போது நமது நாடு ஆயிரம் மடங்கு மேல். நான் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள கர்வப்படுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X