ஏழு புதிய மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏழு புதிய மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (28)
Share
சென்னை: தமிழகத்தில் 7 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் 850 மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் 1650 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே
ஏழு புதிய மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 7 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் 850 மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் 1650 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 800 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 7 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டே மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.


latest tamil news


அதன்படி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஊட்டி ஆகிய மருத்துவக்கல்லூரிகளில் தலா 150 மாணவர் சேர்க்கையும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மருத்துவ கல்லூரிகளில் தலா 100 மாணவர் சேர்க்கையும் என மொத்தமாக 850 மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே துவங்கும். வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. வழக்கமாக தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X