திருநெல்வேலி, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருநெல்வேலி, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021
Share
சென்னை: ‛‛திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்,'' என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:இன்று செப்., 28ம் தேதி: தென்மேற்கு பருவகாற்று காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,
திருநெல்வேலி, கன்னியாகுமரி, கனமழை பெய்யும், சென்னை, வானிலை ஆய்வுமையம், அறிவிப்பு

சென்னை: ‛‛திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்,'' என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இன்று செப்., 28ம் தேதி: தென்மேற்கு பருவகாற்று காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 29 ம் தேதி: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக:


செப்., 30ம் தேதி: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்., 1ம் தேதி: தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்., 2ம் தேதி: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைகாற்றுடன் கூடிய கன முதல் மிகமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லோசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு (சென்டி மீட்டரில்):


சின்னக்கல்லார் (கோவை) 13 செ.மீ., வால்பாறை (கோவை), சோலையாறு (கோவை) தலா 8 செ.மீ., சின்கோனா (கோவை) 7 செ.மீ., பந்தலுார் (நீலகிரி) 5 செ.மீ., பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ., மங்களபுரம் (நாமக்கல்) ஆத்துார் (சேலம்) தலா 2 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.


latest tamil news



மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்:



இன்று 28 ம் தேதி: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்:


இன்று 28 ம் தேதி: கேரளா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X