மம்தா போட்டியிடும் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் படுதோல்வி அடைந்தார். ஆனால், மாநில முதல்வராக மம்தா பதவியேற்றார். பதிவியேற்று ஆறு மாதங்களுக்குள் ஏதோ ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக அவர் பதவி ஏற்க வேண்டும். இதனால், மம்தா தேர்தலில் போட்டியிட வசதியாக, பவானிபூர்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் படுதோல்வி அடைந்தார். ஆனால், மாநில முதல்வராக மம்தா பதவியேற்றார். பதிவியேற்று ஆறு மாதங்களுக்குள் ஏதோ ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக அவர் பதவி ஏற்க வேண்டும். இதனால், மம்தா தேர்தலில் போட்டியிட வசதியாக, பவானிபூர் எம்.எல்.ஏ., சுபன்தீப் சந்தோ பத்யாயே பதவியை ராஜினாமா செய்தார்.



latest tamil news




இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். இடைத்தேர்தல் வரும் 30ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்., 3ம் தேதியும் நடக்கின்றன. பவானிபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை. பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டு உள்ளார்.


latest tamil news




இந்நிலையில் பவானிபூர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இன்று மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததுடன், 'திட்டமிட்டபடி வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெறும்' என அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-202101:19:09 IST Report Abuse
Aarkay திதி கோவிந்தா கோவிந்தா சங்கு ஊத்தியாச்சு
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
28-செப்-202120:41:38 IST Report Abuse
தஞ்சை மன்னர் Please avoid multiple entry of comment
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் கற்காலத்தில் இரு ஆடவர் மோதி ஒரு பெண்ணை அடைந்தனர் பின் போரில் வெல்பவனே தளபதி அரசன் என்றானான் கலாச்சாரம் நாகரீகம் மேம்பட்டு புஜபல பராக்கிரம சாம பேத தான தண்ட யுத்தம் எல்லாம் போனது வாக்கு சீட்டு வந்தது இவர்கள் மேம்படுவதாய் இல்லை தேர்தல் குழாயடி சண்டையிலை என்று எப்போது அவர்கள் உணர்வார்களோ ஒட்டு போடும் வரை மக்கள் தேவை மறுநிமிடமே வாக்காளர் என்ன சொன்னாலும் ஏறாது என்பவனை மீண்டும் மீண்டும் யாரும் தேர்வு செய்வார்களா? டில்லியில் விவசாயிகள் போராட்டம் பல மாதங்களாக தீர்வு காணப் படவில்லையே
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-202123:04:02 IST Report Abuse
Aarkayவெயில் கொஞ்சம் அதிகம்தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X