மம்தா போட்டியிடும் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: உயர் நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

மம்தா போட்டியிடும் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (11)
Share
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் படுதோல்வி அடைந்தார். ஆனால், மாநில முதல்வராக மம்தா பதவியேற்றார். பதிவியேற்று ஆறு மாதங்களுக்குள் ஏதோ ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக அவர் பதவி ஏற்க வேண்டும். இதனால், மம்தா தேர்தலில் போட்டியிட வசதியாக, பவானிபூர்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் படுதோல்வி அடைந்தார். ஆனால், மாநில முதல்வராக மம்தா பதவியேற்றார். பதிவியேற்று ஆறு மாதங்களுக்குள் ஏதோ ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக அவர் பதவி ஏற்க வேண்டும். இதனால், மம்தா தேர்தலில் போட்டியிட வசதியாக, பவானிபூர் எம்.எல்.ஏ., சுபன்தீப் சந்தோ பத்யாயே பதவியை ராஜினாமா செய்தார்.



latest tamil news




இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். இடைத்தேர்தல் வரும் 30ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்., 3ம் தேதியும் நடக்கின்றன. பவானிபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை. பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டு உள்ளார்.


latest tamil news




இந்நிலையில் பவானிபூர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இன்று மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததுடன், 'திட்டமிட்டபடி வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெறும்' என அறிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X