கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொழுதுபோக்கு கிளப்களில் சோதனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொழுதுபோக்கு கிளப்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அதன் மீது உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு
Chennai HC, Clubs, Raid, சென்னை, உயர்நீதிமன்றம், பொழுதுபோக்கு, கிளப், சோதனை, உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொழுதுபோக்கு கிளப்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அதன் மீது உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், சட்டத்துக்குட்பட்டு கிளப் நடத்தப்படுவதாகவும், சோதனை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்வதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் போலீஸ் சோதனைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.


latest tamil news


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தமிழக அரசின் பத்திரப் பதிவு துறை ஐ.ஜி.,யை, தன்னிச்சையாக சேர்த்ததுடன், அவர் சம்மந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகள், தமிழகம் முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் சொசைட்டிகளை, சோதனை செய்து அவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா, சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகளை நடைபெறுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். பொழுதுபோக்கு கிளப்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அதன் மீது உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், கிளப்கள், சொசைட்டிகளின் ஆய்வு செய்வது போலீஸ் அதிகாரிகளின் கடமை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-202101:21:51 IST Report Abuse
Aarkay இதை நடத்துவதெல்லாம் அரசியல்வியாதிகள்தான்.
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
28-செப்-202117:13:18 IST Report Abuse
Sidhaarth இதுல அந்த மயிலாப்பூர் கிளப்பும் அடங்குமா
Rate this:
Cancel
28-செப்-202116:22:58 IST Report Abuse
அப்புசாமி பொழுது போக்கு கிளப்கள்தானே? காசு வெச்சு சீட்டாடுவாங்க. காசுக்கு பதில் டோக்கன் வெச்சு ஆடுவாங்க. பொழுது போக்காம். புண்ணாக்காம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X