பொது செய்தி

இந்தியா

பருவநிலை மாற்றத்தால் பயிர்களுக்கு பாதிப்பு: பிரதமர் மோடி

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: பருவநிலை மாற்றத்தால், மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்திற்கு பிரச்னை ஏற்படுவதால், பயிர்களும் பாதிக்கப்படுகின்றன என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிறு வகைகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக விவசாயத்துறை
primeminister, narendramodi, modi, farmers, crops, பயிர்கள், பிரதமர்நரேந்திரமோடி, பிரதமர், மோடி, பிரதமர்மோடி, விவசாயிகள்

புதுடில்லி: பருவநிலை மாற்றத்தால், மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்திற்கு பிரச்னை ஏற்படுவதால், பயிர்களும் பாதிக்கப்படுகின்றன என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிறு வகைகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக விவசாயத்துறை சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் முன்னுரிமை வகிக்கின்றன. குறிப்பாக பருவங்கள் மாறும்போதும், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், வீரியமிக்க விதைகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடந்த கோவிட் காலத்தில், பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிரை சேதப்படுத்தும் பிரச்னை ஏற்பட்டது. பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, இந்த பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது.


latest tamil news




பாதுகாப்பும், உத்தரவாதமும் கிடைக்கும் போது, விவசாய துறை வளர்ச்சி பெறும். விவசாயிகளின் நிலங்களை பாதுகாக்க, 11 கோடி மண் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. பருவநிலை மாற்றத்தால், புதிய நோய்களும், தொற்றுகளும் உருவாகின்றன. இது மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்திற்கு பெரிய பிரச்னையாக மாறுகின்றன. பயிர்களையும் இது பாதிக்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்.


latest tamil news




அரசு, அறிவியல் மற்றும் சமூகம் இணைந்து செயல்படும்போது, சிறந்த முடிவுகள் கிடைக்கும். விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து செயல்படுவது, புதிய சவால்களை சந்திக்க நாட்டிற்கு பலன்களை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
radha - tuticorin,இந்தியா
28-செப்-202123:06:19 IST Report Abuse
radha தலைவா உங்களாலும் உங்க சங்கி கூட்டத்தாலும்தான் நாட்டுக்கும், மக்களுக்குத்தான் மிகப்பெரிய பாதிப்பு. ஆண்டவந்தான் இதுக்கு வொரு முடிவு கட்டணும்.
Rate this:
Cancel
28-செப்-202116:20:30 IST Report Abuse
அப்புசாமி இவர் வாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டிருந்தாலே நலம் இப்பத்தான் தமிழ்நாட்டில் கொஞ்சம் நல்லபடியாக மழைபெஞ்சு தண்ணிக் கஷ்டம் இல்லாம ரெண்டு வருஷம் ஓட்டியிருக்கோம். இது மாதிரி நிலைமை ஒரு 40, 50 வருஷத்துக்கு முன்னாடி இருந்திச்சு. திரும்ப 1970 பஞ்சம் மாதிரி வராம இருக்கற வழியைப் பாரிங்க. பொது நிலத்தடி நீர் சேமிப்பு வழிகளை உண்டாக்குங்க. 500, 1000 அடிக்கு மேலே தோண்டி நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்துட்டம்.
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
28-செப்-202116:15:45 IST Report Abuse
Sandru தலைவா கடந்த ஏழு வருசமா அட்டை கொடுக்கிறேன் , ஆதார் கொடுக்கிறேன் , நம்பர் கொடுக்கிறேன் என்று சொல்லி இதுவரை மக்களுக்கு அல்வாதான் கொடுத்து வரீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X