டிக்டாக் புதிய மைல்கல்: 100 கோடி பயனர்களை கடந்து சாதனை| Dinamalar

'டிக்டாக்' புதிய மைல்கல்: 100 கோடி பயனர்களை கடந்து சாதனை

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
லண்டன்: 'மாதம் 100 கோடி பயனர்கள் டிக்டாக்கைப் பயன்படுத்துகிறார்கள்' எனக் கூறியுள்ள டிக்டாக் நிறுவனம், பயனர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.விடியோ மூலம் இசையுடன் நடனம் மற்றும் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான செயலிகளில் உலகம் முழுவதும் பிரபலமானது டிக்டாக் செயலி. இது சீனாவைச் சேர்ந்த 'பைட் டான்ஸ்' நிறுவனத்தின் செயலி என்றாலும் இதைப் பயன்படுத்துபவர்கள்

லண்டன்: 'மாதம் 100 கோடி பயனர்கள் டிக்டாக்கைப் பயன்படுத்துகிறார்கள்' எனக் கூறியுள்ள டிக்டாக் நிறுவனம், பயனர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

விடியோ மூலம் இசையுடன் நடனம் மற்றும் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான செயலிகளில் உலகம் முழுவதும் பிரபலமானது டிக்டாக் செயலி. இது சீனாவைச் சேர்ந்த 'பைட் டான்ஸ்' நிறுவனத்தின் செயலி என்றாலும் இதைப் பயன்படுத்துபவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் மற்றும் இந்தியாவில் தான் அதிகம்.



latest tamil news




கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 5.5 கோடி தினசரி பார்வையாளர்களை மட்டும் கொண்டிருந்த இச்செயலியை தற்போது மாதம் 100 கோடி பேர் உபயோகப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற சமூக வலைதளமான பேஸ்புக் மாதம் 350 கோடி பயனாளர்களையும், யூடியூப் 345 கோடிப் பயனாளர்களையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலத்தில் இத்தனை பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தற்காக பயனாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


latest tamil news




இந்தியாவில் 59 செயலிகளை மத்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்தது. அதில், சமூகத்தை சீரழிக்கும் வகையில் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், டிக்டாக் செயலியையும் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X